Leo: லியோவில் கேமியோ கேங்ஸ்டராக ராம் சரண்..? இதெல்லாம் பெரிய உருட்டு... விஜய் ரசிகர்கள் ஷாக்!

சென்னை: விஜய் நடித்துள்ள லியோ மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகியுள்ளது.

லோகேஷ் இயக்கத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, கெளதம் மேனன் உள்ளிட்ட பலரும் விஜய்யுடன் நடித்துள்ளனர்.

 Leo: Ram Charan did not play a cameo role in Vijays Leo

இவர்களுடன் டோலிவுட் ஹீரோ ராம் சரணும் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், லியோவில் ராம் சரண் நடித்துள்ளாரா என்பது பற்றி தற்போது அப்டேட் கிடைத்துள்ளது.

லியோவில் ராம் சரண்..?
விஜய் கேரியரில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் லியோ. மாஸ்டரைத் தொடர்ந்து விஜய் - லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளது. விஜய்யுடன் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், த்ரிஷா, சஞ்சய் தத், கெளதம் மேனன், ப்ரியா ஆனந்த், மிஷ்கின், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனால் லியோ மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.

அதேநேரம் லியோவில் சில கேமியோ கேரக்டர்கள் உள்ளதாக செய்திகள் வெளியாகின. லோகேஷின் விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற கேமியோ கேரக்டரில் நடித்திருந்தார். மேலும், கைதி படத்தில் இருந்து கார்த்தியின் டில்லி கேரக்டரின் வாய்ஸ் ஓவரும் இடம்பெற்றிருந்தது. இதனால், விஜய்யின் லியோவிலும் இதுமாதிரியான சில சர்ப்ரைஸ்ஸான சம்பவங்கள் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

அதாவது ஏஜெண்ட் விக்ரம் கேரக்டரில் நடித்த கமல், அதே கெட்டப்பில் லியோவில் நடித்துள்ளதாக சொல்லப்பட்டது. அல்லது அவரது வாய்ஸ் ஓவர் மட்டும் லியோவில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், ஃபஹத் பாசிலும் லியோவில் நடித்துள்ளதாக மேத்யூ தாமஸ் கூறியிருந்தார். இந்த வரிசையில் டோலிவுட் ஹீரோ ராம் சரணும் விஜய்யுடன் நடித்துள்ளார் என சொல்லப்பட்டது.

லியோவில் செம்ம பவர்ஃபுல்லான கேமியோ கேரக்டரில் ராம் சரண் நடித்துள்ளதாகவும், இது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக இருக்கும் என்றும் செய்திகள் வெளியாகின. விக்ரம் படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் போல, லியோவில் ராம் சரண் மாஸ் காட்டுவார் எனக் கூறப்பட்டது. ஆனால் இது சுத்த உருட்டு என்றும், லியோவில் ராம் சரண் நடிக்கவில்லை எனவும் தற்போது தெரியவந்துள்ளது.

ராஜமெளலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்திருந்த ராம் சரண், தற்போது ஷங்கரின் கேம் சேஞ்சர் படப்பிடிப்பில் பிஸியாக காணப்படுகிறார். பான் இந்தியா படமாக உருவாகும் கேம் சேஞ்சர் அடுத்தாண்டு வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால், ராம் சரண் லியோவில் நடித்திருக்க வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது. அதேநேரம் லோகேஷ் தரப்பில் இருந்தும் ராம் சரணை நடிக்க வைக்க எந்த முயற்சியும் செய்யவில்லையாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X