லியோவையும் லோகேஷையும் விடாமல் அடிக்கிறாங்க.. வலைப்பேச்சு அந்தணனுக்கு பதிலடி கொடுத்த ரத்னகுமார்!

சென்னை: வலைப்பேச்சு பிஸ்மிக்கு ஒன்றுமே தெரியாது என சமீபத்தில் லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் அளித்த பேட்டியில் ட்ரிக்கர் ஆகி வலைப்பேச்சு டீம் தொடர்ந்து லியோவையும் லோகேஷ் கனகராஜையும் வெளுத்து வாங்கி வருகின்றனர். இந்நிலையில், அதற்கு லியோ படத்தின் துணை கதாசிரியரான ரத்னகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுவரை மற்ற எந்தவொரு தமிழ் படங்களுக்கும் இல்லாத அளவுக்கு எதிர்ப்பு நடிகர் விஜய் நடித்த லியோ படத்துக்கு கிளம்பி உள்ளது.

Leo Rathnakumar slams Valaipechu Anthanan for his negative tweet

படத்தின் இரண்டாம் பாதியில் நடந்த சொதப்பல் தான் அதற்கு காரணம் என விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு பல பேட்டிகளில் முட்டுக் கொடுத்து லோகேஷ் கனகராஜ் பேசியது மீண்டும் சர்ச்சைகளையும் புதிய ட்ரோல்களையும் உருவாக்கி உள்ளன.

பொய்யான கதை: படம் வருவதற்கு முன்பாக லியோ படம் இப்படி இருக்கும், அப்படி இருக்கும் 1000 கோடி வசூல் செய்யும் என வலைப்பேச்சு பிஸ்மி மற்றும் அந்தணன் அந்த உருட்டு உருட்டிய நிலையில், தற்போது லியோவுக்கு எதிராக தொடர்ந்து கம்பு சுத்தி வருவதாக விஜய் ரசிகர்கள் போட்டு பொளந்து வருகின்றனர். இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் சொன்ன விளக்கம் சரியில்லை என வலைப்பேச்சு அந்தணன் ஒரு ட்வீட் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.

Leo Rathnakumar slams Valaipechu Anthanan for his negative tweet

தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை: "படிச்சவனோ, பாமரனோ, ஒரு படத்தை பார்த்தா அது அப்பவே புரியணும். அதை வுட்டுட்டு டைரக்டரே ஒவ்வொரு சேனலா உட்கார்ந்து நான் அதை நினைச்சு எடுத்தேன், இதை நினைச்சு எடுத்தேன்னு சொல்றத எப்படி எடுத்துக்கறது?

ஒண்ணு பண்ணலாம்... லியோ ஒடுன தியேட்டர்ல மறுபடியும் ரசிகர்களை வரவழைச்சு இவரோட பேட்டிகளை திரையிடலாம்.

என்னய்யா இது தமிழ்சினிமாவுக்கு வந்த சோதனை?" என்றும் #முட்டுடைரக்டர்ஸ் என்றும் லோகேஷ் கனகராஜை மரண கலாய் கலாய்த்துள்ளார்.

Leo Rathnakumar slams Valaipechu Anthanan for his negative tweet

ரத்னகுமார் பதிலடி: "படிச்சவனும் பாமரனும் Quoted tweets ல என்ன சொல்றாங்க னு தயவு செஞ்சி பாருங்க சார்" என வலைப்பேச்சு அந்தணன் பேச்சுக்கு அதிரடியாக இயக்குநர் ரத்னகுமார் பதிலடி கொடுத்துள்ளார். விஜய்க்கு ஒன்று என்றால் கூல் சுரேஷ் மோடுக்கு ரத்னகுமார் மாறி விடுவார் என விஜய் ரசிகர்கள் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X