இன்டெர்வெல்லாம் வீட்லயே போயிட்டு வந்துடுங்க பாஸ்!.. லியோ இடைவெளி நேரம் குறைப்பு.. அப்போ பாப்கார்ன்?
சென்னை: அதிகாலை காட்சி எல்லாம் லியோவுக்கு கிடையாது. அதனால், வீட்டிலேயே இன்டெர்வெல்லாம் போயிட்டு, காலை லேசான நல்ல உணவை உண்டுவிட்டு லியோ படத்துக்கு வரவும் என்கிற ரேஞ்சில் தற்போது தியேட்டர் ஓனர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
விஜய் நடித்துள்ள லியோ படம் காலை 9 மணிக்கே பல திரையரங்குகளில் 5 காட்சிகள் என ஒட்டுமொத்த ஷோக்களும் லியோ.. லியோ.. லியோ என போட உள்ள நிலையில், இரவு வரை அதிகப்படியான ஷோக்களை போட்டு அள்ளு அள்ளுன்னு கலெக்ஷனை அள்ள வேண்டி இருப்பதால் இடைவேளை நேரத்தை குறைப்பதாக தியேட்டர் ஓனர்கள் எல்லாம் ஒன்று கூடி முடிவெடுத்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்போ தியேட்டரில் விற்க தயாராக வைத்துள்ள பாப் கார்ன், பப்ஸ் எல்லாம் ஊசிப் போயிடுமே என்கிற கேள்வியை ரசிகர்கள் கிளப்ப, உட்கார்ந்திருக்கும் இடத்துக்கே டோர் டெலிவரி செய்ய கூடுதலாக ஆட்களை இறக்கும் ஏற்பாடுகளையும் நிர்வாகம் செய்திருப்பதாகவும், பிவிஆரில் வழக்கத்துக்கு மாறாக 15 நிமிட தாமதம் இன்றி ஆன் டைம்ல படத்தை போட்டு விடுவார்களா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

தியேட்டரில் பார்க்கிங் பிரச்சனை, பாத்ரூமில் தண்ணி வராத பிரச்சனை, ரோட்டில் டிராஃபிக் பிரச்சனை என ஏகப்பட்ட பிரச்சனைகள் நாளை அரங்கேற வாய்ப்புகள் உள்ளதால் குடும்பத்துடன் தியேட்டருக்கு செல்பவர்கள் உஷாரய்யா உஷாரு,, ஓரஞ்சாரம் உஷாருன்னு போயிட்டு வாங்க என்கிற அறிவிப்பையும் தியேட்டர் ஓனர்கள் சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.


Click it and Unblock the Notifications











