Leo Running Time: லியோ ஃபைனல் வெர்ஷன் ரெடி... ரன்னிங் டைம் & சென்சார் அப்டேட் இதுதான்!

சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு மிகப் பெரியளவில் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

அதேநேரம் நாளை மாலை லியோ படத்தின் ட்ரெய்லரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், லியோ ரன்னிங் டைம், சென்சார் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

 Leo Running Time: Vijays Leo movie running time and censor update

லியோ ரன்னிங் டைம்: தளபதி விஜய்யின் லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய லியோ சூட்டிங், ஆகஸ்ட் மாதமே முடிவுக்கு வந்துவிட்டது. இதனையடுத்து போஸ்ட் புரொடக்‌ஷன், கிராபிக்ஸ் வேலைகளில் படக்குழு பிஸியாக இருந்தது. மேலும் கடந்த இரு வாரங்களாக லியோவில் இருந்து விஜய் போஸ்டர், செகண்ட் சிங்கிள் ஆகியவற்றை படக்குழு வெளியிட்டது.

அதன் தொடர்ச்சியாக நாளை மாலை லியோ ட்ரெய்லரும் வெளியாகவுள்ளது. ஏற்கனவே பிரம்மாண்டமாக நடக்கவிருந்த லியோ ஆடியோ லான்ச் கேன்சல் ஆனது. இதனால், லியோ ட்ரெய்லர் ரிலீஸை ரசிகர்கள் முன்னிலையில் தெறிக்கவிட முடிவு செய்துள்ளது படக்குழு. அதன்படி, விஜய்யின் லியோ ட்ரெய்லர் சென்னையின் மிக முக்கியமான பகுதிகளில் பிரம்மாண்டமாக திரையிடப்படவுள்ளது. மேலும், சன் டிவியின் யூடியூப் தளத்திலும் லியோ ட்ரெய்லர் வெளியாகிறது.

இதனையடுத்து லியோ ட்ரெய்லரை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், லியோ படத்தின் ரன்னிங் டைம், சென்சார் அப்டேட் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன. லோகேஷின் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் உருவாகியுள்ளதால், லியோவில் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது என்பது உலகறிந்த உண்மை. இதுவரை வெளியான போஸ்டர்களிலும் விஜய் ஆக்‌ஷன் மோடில் மாஸ் காட்டினார். இதனால், லியோவுக்கு சென்சாரில் யு/ஏ சர்டிபிகேட் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அதேபோல், ரன்னிங் டைம் பற்றியும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி 2 மணி நேரம் 43 நிமிடங்கள் வரை லியோ படத்தின் ரன்னிங் டைம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் செம்ம வெயிட்டான ஆக்‌ஷன் பேக்கேஜ் ரெடி என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். லியோ ட்ரெய்லரிலேயே அதற்கான லீட் இருக்கும் எனத் தெரிகிறது. இதனிடையே வெளிநாடுகளில் லியோ அட்வான்ஸ் புக்கிங் மாஸ் காட்டி வருகிறதாம்.

இதுவரை வேறு எந்த தமிழ்ப் படங்களுக்கும் இல்லாத வகையில் லியோ அட்வான்ஸ் புக்கிங் சாதனை படைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அமெரிக்கா, வட அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் லியோ அட்வான்ஸ் புக்கிங் தொடங்கிவிட்டதாகவும், ப்ரீ ரிலீஸ் புக்கிங் மூலம் பாக்ஸ் ஆபிஸில் லியோ வசூல் தாறுமாறாக சம்பவம் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X