இந்த முறை லியோவை வச்சு செய்யும் அஜித் மற்றும் ரஜினி ரசிகர்கள்.. தொடர்ந்து டிரெண்டிங்கில் #LeoScam

சென்னை: லியோ திரைப்படத்தின் புக்கிங்கிலேயே மோசடி நடைபெற்றுள்ளதாகவும் தியேட்டர்களில் ஆளே இல்லாமல் காத்து வாங்குகிறது என #LeoScam ஹாஷ்டேக்கை அஜித் மற்றும் ரஜினி ரசிகர்கள் தொடர்ந்து 3 நாட்களாக டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் வெளியான போது விஜய் ரசிகர்கள் அந்த படத்திற்கு எதிராக பண்ணதை விட அதிகமாகவே ரஜினி ரசிகர்கள் லியோ படத்துக்கு செய்து வருவதாக கூறுகின்றனர்.

Leo Scam hashtag trending in social media by Ajith and Rajinikanth fans

ஒரு பக்கம் லியோ பாக்ஸ் ஆபிஸ் வசூல் அதிகம் என தகவல்கள் வெளியாகி வருவதையும் ரமேஷ் பாலா உள்ளிட்ட டிராக்கர்கள் மறுக்காமல் அவர்கள் சொல்லும் நம்பர் அதிகம் ஆனால், வசூல் அதை விட குறைவு எனக் கூறி வருகின்றனர்.

400 கோடி இல்லை 300 கோடி: லியோ திரைப்படம் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ரமேஷ் பாலா தொடர்ந்து லியோ படத்தின் வசூல் நிலவரத்தை வெளியிட்டு வருகிறார். மேலும், லியோ படம் 400 கோடி வசூல் என்பது பொய் என்றும் 300 கோடிக்கு மேல் தான் வசூல் செய்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

Leo Scam hashtag trending in social media by Ajith and Rajinikanth fans

லியோ ஸ்கேம்: இந்த ஆண்டு ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் நடந்தது தான் மிகப்பெரிய மோசடி என டிரெண்ட் செய்தனர். அதன் பின்னர் தற்போது விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் தான் மிகப்பெரிய ஸ்கேம் என தொடர்ந்து 3 நாட்களாக மூச்சை பிடித்துக் கொண்டு அஜித் மற்றும் ரஜினி ரசிகர்கள் #LeoScam ஹாஷ்டேக்கை ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

லியோ டிசாஸ்டர்: மேலும், லியோ படம் ஓடவே இல்லை என்றும் அது ஒரு டிசாஸ்டர் படம் என்றும் வசூல் 200 கோடியை கூட நெருங்கவில்லை என மனோபாலா விஜயபாலன் தனது வன்மத்தை கக்கி வருகிறார். ஜெயிலர் படத்தை தினமும் அதிக வசூல் செய்த படம் என சன் பிக்சர்ஸ் வெளியிட்ட நம்பர்களுக்கு மேல் போட்டு பொய்யான கணக்கை அவர் காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X