Leo Second Single - 24 மணி நேரம்கூட ஆகல அதுக்குள்ள இவ்வளவு வியூஸா?.. மாஸ் காட்டும் லியோ செகண்ட் சிங்கிள்
சென்னை: லியோ செகண்ட் சிங்கிள் வெளியாகி புதிய சாதனையை படைத்திருக்கிறது. இதனையடுத்து விஜய் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.
கோலிவுட்டின் ஹாட் டாபிக் என்றால் லியோ படத்தின் ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டதுதான். லியோ ஆடியோ லான்ச்சுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. செப்டம்பர் 30ஆம் தேதி நடக்கும் என்று கூறப்பட்ட சூழலில் அதற்கான பாஸ்களும் தயாராகிவிட்டன. மேலும் மேடை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டதாக சில புகைப்படங்களும் வெளியாகின. ஆனால் அது வாரிசுக்காக நடந்த பணிகளின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் ஒரு தகவல் பரவியது.

என்ன காரணம்?: ஆனால் லியோ படத்தின் ஆடியோ லான்ச் நடக்காது என்று தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்துவிட்டது. மேலும் நிறுவனம் அளித்த விளக்கத்தில், "ஆடியோ வெளியீட்டு விழாவுக்கான பாஸ் கோரிக்கைகள் நிரம்பி வழிகின்றன. அதுமட்டுமின்றி பாதுகாப்பு கட்டுப்பாடுகளையும் கருத்தில் கொண்டு லியோ ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறோம்.
உச்சக்கட்ட அதிர்ச்சி: ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அடிக்கடி படத்தின் அப்டேட்டுகளை வெளியிடுவோம். அதேபோல் பலர் நினைப்பது போல் இதற்கு அரசியல் அழுத்தங்களோ அல்லது வேறு எதுவுமோ காரணம் இல்லை" என குறிப்பிட்டிருந்தது. லியோ ஆடியோ லான்ச் ரத்தானது ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களையும் உச்சக்கட்ட அதிர்ச்சிக்கு கொண்டு சென்றது.

அரசியல் அழுத்தமா?: விஜய் எதிர்காலத்தில் அரசியலில் நுழையப்போகிறார் என்றுதான் கடந்த சில மாதங்களாகவே பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் அதற்கான அச்சாரத்தை லியோ ஆடியோ வெளியீட்டு விழாவில் பேச்சின் மூலம் வெளிப்படுத்துவார் என்று கருதிய சிலர்; இன்னொரு நடிகரை அரசியலுக்குள் வரவிடக்கூடாது என்று திட்டமிட்டே அழுத்தம் கொடுத்ததன் காரணமாகத்தான் இந்த விழா ரத்து செய்யப்பட்டதாக பலர் கூறினர்.
செகண்ட் சிங்கிள்: இந்த சூழலில் படத்தின் இரண்டாவது சிங்களான Bad Ass என்ற பாடல் நேற்று வெளியானது. அனிருத் பாடலை பாட நா ரெடிதான் பாடலை எழுதிய விஷ்ணு எடவன் இந்தப் பாடலை எழுதியிருக்கிறார். வழக்கம்போல் அனிருத்தின் ஸ்டைலில் உருவாகியிருக்கும் பாடலை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். இந்நிலையில் பாடல் வெளியாகி இன்னும் 24 மணி நேரம்கூட முடிவடையாத சூழலில் இதுவரை அந்தப் பாட்டை 8 மில்லியன் பார்வையாளர்கள் யூட்யூபில் பார்த்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











