என்னாது கைப்புள்ளை பிஜிஎம்மா?.. லியோ செகண்ட் சிங்கிளை சும்மா வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள்!
சென்னை: Leo Second Single Troll - லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் ப்ரோமோ நேற்று நள்ளிரவு வெளியான நிலையில், அந்த பாடலின் பிஜிஎம் வின்னர் படத்தில் வடிவேலுவுக்கு போடப்பட்ட ட்யூன் போல இருப்பதாக ரஜினிகாந்த் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
லியோ ஆடியோ லான்ச்சில் கழுகு - காக்கா கதைக்கு விஜய் பதிலடி கொடுப்பாரு பாருங்க என பசங்க படத்தில் வருவது போல விஜய் ரசிகர்கள் காமெடி பண்ணி வந்த நிலையில், கடைசியில் ஆடியோ வெளியீட்டு விழா ரத்தாக காரணமே ரசிகர்கள் தான் என முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து விட்டனர் என ரஜினி ரசிகர்கள் நேற்று முதலே தங்கள் வன்மத்தை கக்க ஆரம்பித்து விட்டனர்.

லியோ ஆடியோ லான்ச் ரத்து சர்ச்சையில் பல அஜித் ரசிகர்கள் சப்போர்ட் செய்தாலும், ரஜினி ரசிகர்கள் ட்ரோல் செய்துக்கொண்டு தான் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்து: வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யை சரத்குமார் சூப்பர்ஸ்டார் என அழைத்ததும், தயாரிப்பாளர் தில் ராஜு நம்பர் ஒன் என பேசியதற்கும் நடிகர் விஜய் எந்தவொரு மறுப்பையும் சொல்லாமல் அமைதியாக அதனை ரசித்தது தான் பிரச்சனை என்றும் மேலும், விஜய் ரசிகர்கள் சூப்பர்ஸ்டார் பட்டத்தை பறிக்க பார்க்கின்றனர் என்கிற பஞ்சாயத்து தான் ஜெயிலர் படத்தின் பாடலான ஹுக்கும் பாடலிலேயே பட்டத்தை பறிக்க நூறு பேரு என வரிகள் இடம்பெற ரஜினியே இடம் கொடுத்தார் என்றும் கூறுகின்றனர்.
லியோ செகண்ட் சிங்கிள்: அனிருத் இசையில் லியோ செகண்ட் சிங்கிள் பாடலான Badass இன்று மாலை 6 மணிக்கு வருவதற்கு முன்னதாகவே ரஜினி ரசிகர்கள் வெளியான ப்ரோமோவை வைத்தே தங்களது பழியை தீர்த்துக் கொள்ள ஆரம்பித்து அந்த பாடலின் ட்யூன் இங்கிருந்து தான் சுடப்பட்டது என கலாய்த்து வருகின்றனர்.
கைப்புள்ள பிஜிஎம்: சுந்தர். சி இயக்கத்தில் பிரசாந்த், கிரண், வடிவேலு நடித்த வின்னர் திரைப்படத்தில் வடிவேலுவின் கைப்புள்ள காமெடி ரொம்பவே ஃபேமஸ். இந்நிலையில், அதன் பிஜிஎம்மை எடுத்து Badass பாடலை அனிருத் உருவாக்கி என்னோட விஸ்வாசம் ரஜினிக்கு தான் என விஜய்யின் முதுகிலேயே குத்தி விட்டதாக அனிருத்தை பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











