Leo Second Single: Badass.. லியோ தாஸ்.. அட்டகாசமாக வெளியான லியோ செகண்ட் சிங்கிள் ப்ரோமோ!

சென்னை: Leo Second Single Badass - அனிருத் இசையில் விஷ்ணு எடவன் வரிகளில் உருவாகி உள்ள லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. அதனை முன்னிட்டு நள்ளிரவே விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் லியோ செகண்ட் சிங்கிள் Badass பாடலின் ப்ரோமோவை அனிருத், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட லியோ படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

லியோ படத்தின் ஆடியோ லான்ச் நாளை மறுதினம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவிருந்த நிலையில், அந்த நிகழ்ச்சியை காண 60 ஆயிரம் ரசிகர்கள் ஆர்வம் காட்டி டிக்கெட்டுகளை கேட்ட நிலையில், அரங்கில் 16 ஆயிரம் பேருக்கு மேல் அனுமதித்தால் சிக்கல் ஏற்பட்டு விடும் என்பதை கருத்தில் கொண்டு நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளதாகவும் எந்தவொரு அரசியல் அழுத்தமும் இல்லை என தயாரிப்பு நிறுவனம் விளக்கம் கொடுத்து அதிர்ச்சியை அளித்திருந்தது.

Leo Second Single Badass promo song and release update out now

ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் பிரஷர் தான் லியோ இசை வெளியீட்டு விழா நடைபெறாமல் போக காரணம் என சவுக்கு சங்கர் உள்ளிட்ட பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். விஜய் ரசிகர்களும் திமுகவுக்கு எதிரான ஹாஷ்டேக்குகளை நேற்று டிரெண்ட் செய்து கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

விஜய்யின் லியோ: பீஸ்ட், வாரிசு படங்கள் ரசிகர்களை திருப்திப்படுத்தாத நிலையில், மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணைந்து எப்படியாவது ரசிகர்களுக்கு ஒரு பக்கா என்டர்டெயின்மென்ட் படமாகவும் நமக்கு ஒரு இண்டஸ்ட்ரி ஹிட் படமாகவும் லியோ படத்தை கொடுக்க வேண்டும் என்கிற முயற்சியில் நடிகர் விஜய் தீவிரம் காட்டியதன் விளைவு தான் இப்படியொரு படம் உருவாகி உள்ளது.

பான் இந்தியா: வாரிசு படம் பைலிங்குவலாக உருவான நிலையில், லியோ படத்தை பான் இந்தியா படமாக கொண்டு செல்ல வேண்டும் என்கிற முயற்சியில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் என பலரை உள்ளே இறக்கி இருக்கின்றனர். ஆனால், அதற்கான புரமோஷன்களை பெரிதாக லியோ படக்குழு இன்னமும் செய்யவில்லை என்பது பான் இந்தியா அளவில் வசூலை பெறுமா? என்கிற கேள்விகளையும் எழுப்புகிறது.

செகண்ட் சிங்கிள் ப்ரோமோ: ஆடியோ லான்ச் ரத்தான நிலையில், அப்செட்டாக இருந்த தனது ரசிகர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் விதமாக நேற்று நள்ளிரவு லியோ படத்தின் செகண்ட் சிங்கிளான Badass Mr Leo Das எனும் பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியானது.

இன்று மாலை 6 மணிக்கு அந்த பாடலின் லிரிக் வீடியோவை வெளியிடப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X