Leo Second Single: “குலசாமிய வேண்டிக்க மாமே..” வெளியானது லியோ செகண்ட் சிங்கிள்! தெறிக்கும் 'Badass'
சென்னை: விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ, அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது.
இதனையடுத்து இந்தப் படத்தில் இருந்து அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.

இந்த வரிசையில் தற்போது லியோ செகண்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.
அனிருத் இசையில் 'BaDass' என்ற டைட்டிலில் வெளியான இந்தப் பாடல், விஜய் ரசிகர்களுக்கு வைப் கொடுத்துள்ளது.
வெளியானது லியோ செகண்ட் சிங்கிள்
வாரிசு படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்துள்ள லியோ அடுத்த மாதம் வெளியாகிறது. நீண்ட இடைவேளைக்குப் பின்னர் ஒரே ஆண்டில் விஜய்யின் இரண்டு படங்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ, விஜய்யின் கேரியரில் தரமான சம்பவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படம் கோலிவுட்டில் இருந்து முதல் ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணையும் என சினிமா விமர்சகர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். லியோவில் விஜய்யுடன் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கெளதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லோகேஷின் LCU கான்செப்ட்டில் உருவாகியுள்ள லியோ படத்திற்கு விஜய் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில் இந்த வாரம் நடைபெறவிருந்த லியோ இசை வெளியீட்டு விழா திடீரென ரத்தானது. இதனால் பெரிய ஏமாற்றத்தில் இருந்த விஜய் ரசிகர்களுக்கு, தற்போது தரமான ட்ரீட் கொடுத்துள்ளது லியோ படக்குழு. அதன்படி லியோ செகண்ட் சிங்கிள் தற்போது வெளியாகி அதிரடி காட்டியுள்ளது. அனிருத் இசையில் "BaDass" என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இந்தப் பாடல், லியோ செகண்ட் சிங்கிளாக வெளியாகியுள்ளது.
அனிருத்தின் மிரட்டலான இசையில் விஜய்க்கான தீம் பாடலாக இது உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. அதேபோல், பாடல் வரிகளும் விஜய் ரசிகர்களுக்கு செம்ம ஹைப் கொடுத்துள்ளது. விஷ்ணு எடவன் இந்தப் பாடலை எழுதியுள்ளார். லியோ படத்துக்கான பூஸ்ட்அப் பாடலாக உருவாகியுள்ள "BaDass", வெளியானது முதலே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
லியோ இசை வெளியீட்டு விழா கேன்சல் ஆனதால் ஏமாற்றத்தில் இருந்த ரசிகர்களுக்கு, செகண்ட் சிங்கிள் செம்ம ட்ரீட்டாக அமைந்துள்ளது. நான் ரெடி பாடலை தொடர்ந்து BaDass என்ற செகண்ட் சிங்கிளும் லியோ வெற்றியை உறுதி செய்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











