Leo Second Single: அதிரடியாக வந்த லியோ செகண்ட் சிங்கிள் அப்டேட்... வைப் கொடுத்த 'Badass' குறியீடு!

சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 30ம் தேதி நடைபெறும் என சொல்லப்பட்டது.

ஆனால் திடீரென இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. அதேநேரம் அதிரடியாக லியோ செகண்ட் சிங்கிள் நாளை வெளியாகும் என தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 Leo Second Single: Vijays Leo second single will be released tomorrow

நாளை வெளியாகும் லியோ செகண்ட் சிங்கிள்: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அடுத்த மாதம் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை லலித் குமார் தயாரித்துள்ளார். பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள லியோ படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைக்கும் அளவில் அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.

கடந்த வாரம் லியோ படத்தில் இருந்து விஜய்யின் போஸ்டர்கள் வெளியாகின. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இந்த போஸ்டர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து லியோ செகண்ட் சிங்கிள் அல்லது இசை வெளியீட்டு விழாவுக்கான அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் படக்குழு தரப்பில் இருந்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தாலும், இந்த வாரம் 30ம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெறும் என சொல்லப்பட்டது.

லியோ இசை வெளியீட்டு விழா அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், திடீரென ஆடியோ லான்ச் கேன்சல் செய்யப்படுவதாக படக்குழு அறிவித்தது. லியோ இசை வெளியீட்டு விழாவை பார்க்க வழங்கப்படும் பாஸ்கள், போலியாக அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால், அரசியல் அழுத்தம் காரணமாக தான் லியோ இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தும் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். இதனையடுத்து விஜய் ரசிகர்களை கூல் செய்வதற்காக தரமான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி லியோ செகண்ட் சிங்கிள் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

#Badass என்ற ஹேஷ்டேக்குடன் வெளியான இந்த அப்டேட்டை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விஜய் தனது கையில் நீளமான வாளுடன் நிற்பதை போல தெறி மாஸான போஸ்டருடன் இந்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு. இதன்மூலம் நாளை வெளியாகும் லியோ செகண்ட் சிங்கிள், விஜய்யின் இன்ட்ரோ சாங்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் லியோ செகண்ட் சிங்கிள் வெளியாகும் நேரம் பற்றி படக்குழு அப்டேட் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X