சென்னையில் இன்று தொடங்குகிறதா லியோ ஷூட்டிங்?.. எங்கு தெரியுமா?

சென்னை: லியோ படத்தின் ஷூட்டிங் இன்று சென்னையில் தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாரிசு படத்தை விஜய் மிகவும் எதிர்பார்த்தார். பைலிங்குவலாக உருவான வாரிசு வெற்றி பெற்றால் தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை நிலைநிறுத்தலாம் என்ற கணக்கில்தான் வாரிசு படத்தில் கமிட்டானார் விஜய். ஆனால் படம் போதிய வரவேற்பைப் பெறாமல் விஜய்யின் கணக்கை பொய்யாக்கியது.

கட்டாயத்தில் இருக்கும் விஜய்

கட்டாயத்தில் இருக்கும் விஜய்

பீஸ்ட் படுதோல்வியடைய, வாரிசு கலவையான விமர்சனங்களை பெற அடுத்த படம் நிச்சயம் ஹிட்டாக வேண்டும் என்ற கட்டாயத்தில் விஜய் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் கமிட்டாகியிருக்கிறார் விஜய். இந்தப் படமும் மாஸ்டர் படம் போலவே மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் அவரும், அவரது ரசிகர்களும் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

காஷ்மீரில் நடந்த லியோ ஷூட்டிங்

காஷ்மீரில் நடந்த லியோ ஷூட்டிங்

லியோ படத்தில் விஜய்யுடன் சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர், த்ரிஷா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்துவருகின்றது. பான் இந்தியா படமாக இப்படம் வெளியாகவிருப்பதால் படத்தை தரமாக ஷூட் செய்துவருகிறார் லோகேஷ் கனகராஜ். இதன் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக காஷ்மீரில் நடந்து சமீபத்தில்தான் முடிந்தது. சில நாட்களுக்கு முன்பு படக்குழு சென்னைக்கு திரும்பியிருக்கிறது.

சென்னையில் இன்று தொடங்கும் ஷூட்டிங்

சென்னையில் இன்று தொடங்கும் ஷூட்டிங்

சென்னைக்கு திரும்பிய படக்குழு குட்டி ரெஸ்ட் எடுத்ததாக கூறப்பட்டது. அதனையடுத்து சென்னையில் ஒரு ஷெட்யூலுக்கு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. அதன்படி லியோ படத்தின் ஷூட்டிங் சென்னையில் இன்று தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது. பிரசாத் ஸ்டூடியோவில் போடப்பட்டிருக்கும் செட்டில் படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கி ஒரு வாரம் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

க்ளைமேக்ஸ் ஹைதராபாத்தில்?

க்ளைமேக்ஸ் ஹைதராபாத்தில்?

சென்னையில் ஒரு வாரம் ஷூட்டிங்கை முடித்துவிட்டு படத்தின் க்ளைமேக்ஸுக்காக ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டிக்கு படக்குழு செல்லவிருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தின் ரிலீஸ் தேதி முன்னரே அறிவிக்கப்பட்டதாலும், பக்கா பிளானிங் இயக்குநர் என பெயர் எடுத்துவிட்டதாலும் அதை காப்பாற்றும் விதமாக லோகேஷ் கனகராஜ் பம்பரமாய் சுழன்று வேலை செய்துவருகின்றார் என கோடம்பாக்கத்தில் பேச்சு எழுந்திருக்கிறது.

வியாபாரத்தில் மாஸ் காட்டிய லியோ

வியாபாரத்தில் மாஸ் காட்டிய லியோ

லியோ படத்தின் ப்ரீ பிஸ்னஸ் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நடந்திருக்கிறதென சமீபத்தில் தகவல் வெளியானது. அதேபோல் லியோ படத்தை பிற மொழிகளில் ஓடிடியில் வெளியிடும் உரிமத்தை 75 கோடி ரூபாய் கொடுத்து நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக நேற்று ஒரு தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஷூட்டிங் முடிவதற்குள்ளாகவே லியோ படத்தின் வியாபாரம் உச்சம் சென்றிருப்பது கோலிவுட்டை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X