Leo: லியோவில் மொத்தம் 6 வில்லன்கள்... சீக்ரெட் லிஸ்ட்டில் இருக்கும் அந்த மூன்று பேர் யார்..?

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகியுள்ளது.

அதேபோல் லியோ திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஜானரில் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக 6 முன்னணி நடிகர்கள் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 Leo: Six actors have played villain roles for Vijay in the Leo film

இவர்களில் 3 பேர் பற்றிய அப்டேட் ரொம்பவே சீக்ரெட்டாக இருப்பதாகவும் இப்போது தெரியவந்துள்ளது.

சீக்ரெட் லிஸ்ட்டில் இருக்கும் 3 வில்லன்கள்
விஜய்யின் லியோ திரைப்படத்தை லலித் குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். தனது முதல் படமான மாநகரம் முதல் கடைசியாக வெளியான விக்ரம் வரை மேக்கிங்கில் அசர வைத்தவர் லோகேஷ். அதனால், லியோ திரைப்படமும் ரசிகர்களை அதிகம் எதிர்பார்க்க வைத்துள்ளது. லியோவில் விஜய், லோகேஷ், அனிருத், லலித் குமார் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் லியோ லோகேஷின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல் மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் படம் என்பதும் அனைவரும் அறிந்ததே. விஜய்யுடன் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, கெளதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், ப்ரியா ஆனந்த், மன்சூர் அலிகான் என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.

இன்னும் பலரும் நடித்துள்ள லியோ படத்தில், விஜய்க்கு மொத்தம் 6 வில்லன்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின் ஆகியோர் கன்ஃபார்ம் எனத் தெரிகிறது. கெளதம் மேனன் போலீஸ் ஆபிஸர் என்பதால், அவர் வில்லனாக நடித்திருக்க வாய்ப்பில்லையாம். ஆனால், இந்த லிஸ்ட்டில் இன்னும் 3 பேரை சீக்ரெட்டாக வைத்துள்ளாராம் லோகேஷ்.

கமலின் விக்ரம் படத்தின் க்ளைமேக்ஸில், திடீரென சர்ப்ரைஸ்ஸாக என்ட்ரி கொடுத்தார் சூர்யா. ரோலக்ஸ் என்ற கேரக்டரில் மரண மாஸ் காட்டிய சூர்யா, விக்ரம் படத்தின் கடைசி 10 நிமிடங்களில் ரசிகர்களையே மிரள வைத்துவிட்டார். இந்த ரோலக்ஸ் கேரக்டரை தனி படமாக எடுக்கவும் லோகேஷ் முடிவு செய்துவிட்டார். அது ஒருபக்கம் இருந்தாலும், லியோவில் ரோலக்ஸ் சத்தம் கேட்கும் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் மட்டும் இல்லாமல், விக்ரம் படத்தில் சந்தானம் கேரக்டரில் நடித்த விஜய் சேதுபதியின் சத்தமும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் என்றே தெரிகிறது. லியோ லோகேஷின் சினிமாட்டிக் யுனிவர்ஸாக உருவாகியிருந்தால், ரோலக்ஸ், சந்தானம் ஆகியோர் கண்டிப்பாக என்ட்ரி கொடுக்க வாய்ப்புள்ளதாம். அவர்களையும் சேர்த்துதான் லியோவில் மொத்தம் 6 வில்லன்கள் என சொல்லப்படுகிறது. இந்த லிஸ்ட்டில் உலகநாயகன் இருக்கவும் வாய்ப்புள்ளது என்பது தான் லேட்டஸ்ட் அப்டேட்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X