Leo Spoiler: “விக்ரமுக்கு முன்னாடி... கைதிக்கு பின்னாடி..” இதுதான் லியோ கதை... அடேங்கப்பா அப்டேட்!
சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி வெளியாகவுள்ளது.
இதனையடுத்து இந்தப் படத்தின் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் வரும் 15ம் தேதி முதல் தொடங்கும் என சொல்லப்படுகிறது.
முன்னதாக லியோ படத்தில் மூன்றாவது பாடல் நேற்று மாலை வெளியானது.
இந்நிலையில், லியோ படத்தின் ஒன்லைன் ஸ்டோரி பற்றி தாறுமாறான அப்டேட் வெளியாகியுள்ளது.

லியோ ஸ்பாய்லர் அலர்ட்
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி முதன்முறையாக மாஸ்டர் படத்தில் இணைந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது லியோவில் இணைந்துள்ள இந்தக் கூட்டணி, ரசிகர்களுக்கு தரமான விருந்து கொடுக்க ரெடியாகிவிட்டது. அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய லியோ, வரும் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையடுத்து தற்போது ரசிகர்கள் லியோ ஃபீவரில் வலம் வருகின்றனர்.
லியோ படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் வரும் 15ம் தேதி தொடங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. லியோ லோகேஷின் யுனிவர்ஸில் உருவாகியுள்ளதா என்பதே ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இதுபற்றி லோகேஷ் கனகராஜ் இதுவரை உறுதியான எந்த அப்டேட்டும் கொடுக்கவில்லை. ஆனால், தயாரிப்பாளர் லலித் குமார், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கன்ஃபார்ம் எனக் கூறியிருந்தார்.
இதனால், லியோ LCU ஜானர் படம் என்றே சொல்லப்படுகிறது. கடந்த வாரம் வெளியான லியோ ட்ரெய்லரில் அதற்கான லீட்கள் இருப்பதாக ரசிகர்கள் விளக்கம் கொடுத்து வருகின்றனர். அப்படி நெட்டிசன்கள் கண்டுபிடித்த லியோ ஒன்லைன் ஸ்டோரி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது கைதி படத்தில் இன்ஸ்பெக்டர் பிஜாய் கேரக்டரில் நடித்த நரேனின் மகள் தான் பிக் பாஸ் ஜனனி என கண்டுபிடித்துள்ளனர்.
லியோவில் பார்த்திபன் கேரக்டரில் நடித்துள்ள விஜய்யின் மகன் மேத்யூ தாமஸும், பிஜாய் மகள் பிக் பாஸ் ஜனனியும் ஒரே பள்ளியில் படிப்பதாகவும், அங்கு தான் டில்லி கார்த்தியின் மகளை நரேன் படிக்க வைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர். அதேபோல், லியோவில் அன்பு, அடைக்கலம், நெப்போலியன் இருப்பதாகவும், லியோ ப்ளாஷ்பேக் கைதி படத்தின் முந்தைய வெர்ஷனாகவும், பார்த்திபன் போர்ஷன் கைதிக்கு பின்பு நடப்பதாகவும் உருவாகியுள்ளதாம்.

அதேபோல் பிஜாய் குடும்பத்தை அடைக்கலம் கேங் கொலை செய்ததும் அவர் கமலுடன் விக்ரம் படத்தில் இணைகிறார். அதனால் லியோ விக்ரமுக்கு முந்தைய கதை என்றும் நெட்டிசன்கள் அப்டேட் கொடுத்து லோகேஷ் கனகராஜ்ஜையே அசரடித்துள்ளனர். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், லியோ கதை இப்படியும் இருக்கலாம் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











