Leo in Top 5 Box Office: இந்திய சினிமாவில் இதுவரை முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய டாப் 5 படங்கள்!

சென்னை: இதுவரை வெளியான இந்திய படங்களில் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய டாப் 5 படங்களில் தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் இடம்பெற்றுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், சாண்டி, பிரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன், மன்சூர் அலிகான், ஜார்ஜ் மரியன், மேத்யூ தாமஸ், வையாபுரி மற்றும் அனுராக் காசியப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள லியோ கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

முதல் நாளில் லியோ திரைப்படம் 148.5 கோடி ரூபாயை வசூல் ஈட்டி இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே அதிக வசூல் ஈட்டிய படமாக மாறியுள்ளது. இந்நிலையில், இதுவரை இந்திய சினிமாவில் வெளியான டாப் 5 அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம் வாங்க..

1. ஆர்ஆர்ஆர்: ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் 218 கோடி ரூபாயை வசூல் செய்து ஆல் டைம் அதிக வசூல் செய்த இந்திய படங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Leo spotted a super place at Top 5 all time Highest Grossing Indian movies list

2. பாகுபலி 2: ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா டகுபதி, சத்யராஜ் மற்றும் ரம்யா கிருஷ்ணன் நடித்த பாகுபலி இரண்டாம் பாகம் முதல் நாளில் 205 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

Leo spotted a super place at Top 5 all time Highest Grossing Indian movies list

3. கேஜிஎஃப் 2: அதிக வசூல் ஈட்டிய இந்திய படங்களில் மூன்றாம் இடத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி செட்டி, சஞ்சய் தத் நடித்த கே ஜி எஃப் 2 திரைப்படம் பிடித்துள்ளது. முதல் நாளில் இந்த படம் 164 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leo spotted a super place at Top 5 all time Highest Grossing Indian movies list

4. லியோ: இந்த வரிசையில் நான்காம் இடத்தை நடிகர் விஜய் நடித்துள்ள லியோ பிடித்துள்ளது. முதல் நாளில் லியோ 148.5 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்த நிலையில் இந்த டாப் ஐந்து பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் தமிழ் படம் என்கிற அந்தஸ்தையும் லியோ பெற்றுள்ளது.

Leo spotted a super place at Top 5 all time Highest Grossing Indian movies list

5. ஜவான்: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி உள்ளிட்ட படம் நடித்த ஜவான் திரைப்படம் முதல் நாளில் 128 கோடி ரூபாயை வசூலித்து இதுவரை முதல் நாளில் அதிகம் வசூல் ஈட்டிய இந்திய திரைப்படங்கள் டாப் 5 பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. மேலும், பிரபாஸின் சாஹோ, ஆதிபுருஷ், ஷாருக்கானின் ஜவான், ரஜினிகாந்தின் ஜெயிலர் உள்ளிட்ட படங்கள் முதல் நாளில் 100 கோடி வசூலை ஈட்டிய படங்களாக உள்ளன.

Leo spotted a super place at Top 5 all time Highest Grossing Indian movies list

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X