பெரிய நடிகர்களுடன் படுத்தே நடிகைகள் சான்ஸ் வாங்கிடுவாங்க.. லியோ பட நடிகரா இப்படி பேசியது?

சென்னை: பெண்கள் குறித்தும் நடிகைகள் குறித்தும் படுமோசமாக லியோ பட நடிகர் பேசிய த்ரோபேக் பேட்டி திரைத்துறையில் பெரிய அதிர்வலைகளை எழுப்பியது.

300 பெண்களுடன் உறவு கொண்டேன் என பேசிய அதே நடிகர் சஞ்சய் தத் தான் நடிகைகள் சினிமாவில் சான்ஸ் வாங்குவது ரொம்பவே ஈஸி என்றும் பழைய பேட்டி ஒன்றில் பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த் நடித்துள்ள லியோ படத்தில் வில்லனாக நடித்துள்ள சஞ்சய் தத் எப்போ, எந்த பேட்டியில் இப்படி மோசமாக நடிகைகள் குறித்து பேசியுள்ளார் என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..

Leo star Sanjay Dutt once done bad mouth about top actress adjustment in industry shocks everyone

சர்ச்சை நாயகன் சஞ்சய் தத்: பாலிவுட்டின் டாப் ஹீரோவாக வலம் வந்த சஞ்சய் தத் முன்னா பாய் எம்பிபிஎஸ் உள்ளிட்ட பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதே நேரத்தில் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி சிறை தண்டனை வரை அனுபவித்து இருக்கிறார் சஞ்சய் தத்.

1971ம் ஆண்டு வெளியான ரேஷ்மா அவுர் ஷேரா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சஞ்சய் தத் 1981ம் ஆண்டு வெளியான ராக்கி படத்தின் மூலம் நாயகனாக பாலிவுட்டில் அறிமுகமானார். நாம், தேஜா, சாஜன், சதாக், அதர்ம், மிஷன் காஷ்மீர், குருக்‌ஷேத்ரா, முன்னாபாய் எம்பிபிஎஸ் முதல் மற்றும் இரண்டு என பல படங்களில் நடித்துள்ளார்.'

Leo star Sanjay Dutt once done bad mouth about top actress adjustment in industry shocks everyone

கேஜிஎஃப் 2 வில்லன்: 63 வயதாகும் நடிகர் சஞ்சய் தத் சமீப காலமாக தென்னிந்திய மொழி படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் 2 படத்தில் அதீரா கதாபாத்திரத்தில் வைக்கிங் போலவே காட்சியளித்த சஞ்சய் தத்தின் மிரட்டலான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

கேஜிஎஃப் படத்தைத் தொடர்ந்து மேலும், சில தென்னிந்திய படங்களிலும் வில்லனாக நடித்து வரும் சஞ்சய் தத் விஜய்யின் லியோ படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார்.

Leo star Sanjay Dutt once done bad mouth about top actress adjustment in industry shocks everyone

லியோ வில்லன்: லியோ படத்தில் தாஸ் அண்ட் கோ என வரும் நிறுவனமே சஞ்சய் தத்தின் நிறுவனமாக இருக்கும் என பேச்சுக்கள் அடிபடுகின்றன. சஞ்சய் தத்தின் கேங்கில் இருந்து விலகி த்ரிஷாவை திருமணம் செய்துக் கொண்டு குழந்தையுடன் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வரும் விஜய்யை மீண்டும் சஞ்சய் தத் கேங் தேடிச் சென்று தொல்லைக் கொடுக்க அத்தனை பேரையும் லியோவாக மாறி பார்த்திபன் துவம்சம் செய்வது தான் கதை என்றும் கூறி வருகின்றனர்.

பெண்கள் குறித்து ஆபாசமாக: நடிகர்களை விட அழகான நடிகைகளுக்கு சினிமாவில் எளிதில் வாய்ப்புக் கிடைத்து விடும். அவர்கள் தங்களது மர்ம பாகங்களை எந்தளவுக்கு காட்டுகின்றனரோ அந்த அளவுக்கு அவர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைத்து விடும் என 1993ம் ஆண்டு Cine Blitz இதழுக்கு அளித்த பேட்டியில் பேசியது அப்போதே பெரும் சர்ச்சையை கிளப்பியது.

Leo star Sanjay Dutt once done bad mouth about top actress adjustment in industry shocks everyone

மேலும், டாப் ஹீரோக்களுடன் படுக்கையை பகிர்ந்தால் நடிகைகள் எளிதில் டாப் ஹீரோயின்கள் ஆகிவிடுவார்கள். ஆனால், சினிமாவில் நடிகராக மாறுவது ரொம்பவே கஷ்டமான விஷயம். நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும், ஆக்‌ஷன் காட்சிகளில் உயிரை கொடுத்து நடிக்க வேண்டும் என பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு பல முன்னணி நடிகைகள் அப்போதே கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

சமீபத்தில், 300க்கும் மேற்பட்ட பெண்கள் தன்னுடன் படுக்கையை ஷேர் செய்தனர் என சஞ்சய் தத் பேசியது பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில், லியோ பட நடிகரின் பழைய பேட்டிகளை எல்லாம் நெட்டிசன்கள் தோண்டி எடுத்து போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X