விஜய் ரசிகர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்.. வரிசை கட்டும் லியோ நடிகர்களின் பிறந்தநாள்.. பவர் கிக்கு!
சென்னை: இதுவரை எந்தவொரு டாப் ஹீரோக்களின் படங்களுக்கும் இல்லாத அளவுக்கு வரிசையான அப்டேட்கள் அதிகாரப்பூர்வமாகவே தயாரிப்பு தரப்பிடம் இருந்து இப்படி வந்திருக்குமா என்றால் அது சந்தேகம் தான். அந்த அளவுக்கு லியோ படம் ஆரம்பித்தது முதல் இதுவரை எண்ணற்ற அப்டேட்கள் வெளியாகி உள்ளன.
லியோ படத்தில் ஆண்டனி தாஸ் கதாபாத்திரத்தில் நடித்து வரும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு தெறி மாஸான க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் அடைய வைத்தது.

அதே போல, ஆகஸ்ட் 15ம் தேதி நடிகர் அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு ஹரோல்ட் தாஸ் தெறிக்க க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு ஹைப்பை எகிற வைத்துள்ளது.
அடுத்த பர்த்ட்டே யாருக்கு: இந்நிலையில், லியோ படத்தில் நடித்து வரும் ஒரு டஜன் பவர் ஃபர்மார்களில் அடுத்த பர்த்டே யாருக்கு என ரசிகர்கள் வலை வீசித் தேட, ஒரு பெரிய லிஸ்ட்டே விஜய் ரசிகர்கள் வலையில் சிக்க சந்தோஷத்தில் பவர் கிக்கு என ரசிகர்கள் அப்டேட்டுக்கு ரெடியாகி ஆட்டம் போட்டு வருகின்றனர்.

பாலிவுட் இயக்குநரும் நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்த அனுராக் காஷ்யப்பின் பிறந்தநாள் வரும் செப்டம்பர் 10ம் தேதி வருகிறது. லோகேஷ் படத்தில் ஒரு சீனில் சாகக் கூட தான் தயார் என சொல்லி சான்ஸை பிடித்த அனுராக் காஷ்யப்பின் பர்த்டே விரைவில் வர உள்ள நிலையில், அவரது கேரக்டர் போஸ்டர் அல்லது க்ளிம்ப்ஸ் வீடியோ வருமா என ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட் செய்து வருகின்றனர்.
பிரியா ஆனந்த் பர்த்டே: அனுராக் காஷ்யப்பின் பிறந்தநாளை தொடர்ந்து லியோ படத்தில் இன்னொரு ஹீரோயினாக நடித்து வரும் நடிகை பிரியா ஆனந்தின் பிறந்தநாள் வரும் செப்டம்பர் 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினமும் ஒரு ஹாட் அப்டேட்டை லியோ படக்குழு வெளியிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

மிஷ்கின் பிறந்தநாள்: நடிகை பிரியா ஆனந்த் பிறந்தநாளை தொடர்ந்து லியோ படத்தில் குட்டி வில்லனாக நடித்துள்ள மாவீரன் படத்தின் மெயின் வில்லனும் இயக்குநருமான மிஷ்கினின் பிறந்தநாள் வரும் செப்டம்பர் 20ம் தேதி வருகிறது. இது செப்டம்பர் மாதம் அல்ல லியோ அப்டேட் மாதம் என்றே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கடைசியாக இன்னொரு பர்த்டே: மாளவிகா மோகனனுடன் ஜோடி போட்டு நடித்த 17 வயது இளம் நடிகர் மேத்யூ தாமஸின் பிறந்தநாள் லியோ படத்தின் ரிலீஸுக்கு ஒரு சில நாட்கள் முன்னதாக அக்டோபர் 16ம் தேதி வருகிறது. கண்டிப்பாக லியோ ப்ரோமோ வீடியோவே மேத்யூ சீனை வைத்து வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என விஜய் ரசிகர்கள் கணக்குப் போட்டு வருகின்றனர்.

மேலும், இப்படியே ஒவ்வொருத்தர் பிறந்தநாளுக்கும் ஒரு நிமிட வீடியோ வெளியானால், படம் வெளியாவதற்கு முன்பே பாதி படம் பார்த்து விடலாமே என்றும் கற்பனை குதிரைகளை ஓடவிட்டு வருகின்றனர். அதிக பட்சம் சில பிரபலங்களின் பிறந்தநாளுக்கு வெறும் கேரக்டர் போஸ்டர் மட்டும் தான் வரும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











