Leo Success Meet: “பேசுறதுக்கு எதும் இல்ல... நன்றி மட்டும் சொல்லிடுறேன்..?” லோகேஷ் பளீச்!!
சென்னை: லியோ படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டார்.
முன்னதாக லியோ படப்பிடிப்பில் விஜய்க்கும் லோகேஷுக்கும் இடையே மோதம் என செய்திகள் வெளியாகின.
அதனால், லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில், லியோ சக்சஸ் மீட்டில், "நன்றி சொல்வதற்காக தான் வந்தேன்" என லோகேஷ் பேசியது வைரலாகி வருகிறது.

நன்றி மட்டும் சொல்லிடுறேன்: விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம், கடந்த மாதம் திரையரங்குகளில் ரிலீஸானது. பான் இந்தியா படமாக வெளியான லியோ, உலகம் முழுவதும் 550 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில், விஜய், த்ரிஷா, அர்ஜுன், மிஷ்கின், லோகேஷ் கனகராஜ், லலித் குமார் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், ரசிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் லியோ வெற்றி விழாவை காண திரண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் விஜய்க்கு முன்னதாக லோகேஷ் கனகராஜ் பேசினார். விஜய்யின் செல்ல தம்பிகளில் ஒருவரான லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் படத்தில் இருந்து தளபதிக்கு நெருக்கமாகிவிட்டார். ஆனால், லியோ படத்தில் விஜய் சில காட்சிகளை மாற்ற சொன்னதாகவும், அதனால் லோகேஷ் பாதி படத்திலேயே விலகிவிட்டதாகவும் சொல்லப்பட்டது.
இதனால், லியோ படத்தின் மீதி பகுதியை ரத்னகுமார் தான் இயக்கினார் எனவும் செய்திகள் வெளியாகின. அதேபோல், லியோ இசை வெளியீட்டு விழாவில் லோகேஷ் கனகராஜ் கலந்துகொள்ள மாட்டேன் என சொன்னதால் தான், அந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன. ஆனால் அதெல்லாம் பொய் என்றும், இந்த செய்திகளை பார்த்து நானும் விஜய்ண்ணாவும் சிரித்துக்கொண்டதாக லோகேஷ் கூறியிருந்தார்.

இந்நிலையில், லியோ வெற்றி விழாவில் பேசிய லோகேஷ், "இங்கே பேசுவதற்காக நான் எதையும் தயார்செய்துவிட்டு வரவில்லை. நன்றி சொல்ல மட்டுமே வந்தேன். விஜய்ண்ணா, லலித் சார், ஜெகதீஷ் சார், பத்திரிகையாளர்கள், லியோ படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி" எனக் கூறினார். மேலும், இந்தப் படத்தின் எடிட்டிங் நடக்கும் போது, என்னுடைய அசிஸ்டெண்ட் இயக்குநர்கள் அனைவரும் எடிட்டர் பிலோமின் ராஜ் ஸ்டுடியோவின் மாடிப்படியில் தான் படுத்திருந்தனர் என்றார்.
முக்கியமாக லியோவில் வெற்றிமாறன் சாரை வில்லனாக நடிக்க வைக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் அது முடியவில்லை என்றார். லோகேஷ் இயக்கிய இன்னொரு படத்திலும் வெற்றிமாறனை வில்லனாக நடிக்க வைக்க முயற்சித்தாராம். லியோ குடும்பங்கள் கொண்டாடும் கேங்ஸ்டர் படம். விஜய்ண்ணா ஓக்கே சொன்னால் லியோ 2ம் பாகம் உருவாகும். முதன்முறையாக நான் இயக்கிய படத்தின் வெற்றி விழா மேடையில் நிற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். இதன்மூலம் விஜய்க்கும் லோகேஷுக்கும் இடையே மோதல் என சொல்லப்பட்டது வதந்தி எனத் தெரியவந்துள்ளது.


Click it and Unblock the Notifications











