Leo Success Meet: “விஜய்க்காக இதயத்தை அறுத்துக் கொடுப்பேன்..” ரசிகர்களை மிரள வைத்த மிஷ்கின்!!

சென்னை: விஜய்யின் லியோ வெற்றி விழா கொண்டாட்டம் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

அதில், விஜய்யுடன் த்ரிஷா, அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட லியோ படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்தப் படத்தில் இயக்குநர் மிஷ்கின் முக்கியமான கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

இந்நிலையில், லியோ சக்சஸ் மீட்டில் பங்கேற்ற மிஷ்கின், விஜய் பற்றி பேசியது வைரலாகி வருகிறது.

 Leo Success Meet: Director Mysskin praised Vijay at the Leo Success meet

விஜய்க்காக இதயத்தை அறுத்துக் கொடுப்பேன்: விஜய்யின் லியோ திரைப்படம் அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியானது. அக்டோபர் 19ம் தேதி ரிலீஸான இந்தப் படம், இதுவரை 550 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவான இந்தப் படத்தில், சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, மிஷ்கின், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில், லியோ படத்தின் வெற்றி விழா, சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

அதில், இயக்குநர் மிஷ்கின் கலந்துகொண்டு லியோ படம் குறித்தும், விஜய்யுடன் நடித்த அனுபவம் பற்றியும் மனம் திறந்தார். ஆரம்பம் முதல் இறுதி வரை விஜய் ரசிகர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் வெறித்தனமாக பேசியிருந்தார் மிஷ்கின். அதாவது "என் வாழ்க்கையில் ப்ரூஸ் லீ, மைக்கேல் ஜாக்சன் என இரண்டு லெஜண்ட்களை பற்றி படித்துள்ளேன். ஆனால் நான் நேரில் பார்த்த ஒரேயொரு லெஜண்ட் விஜய் தான்" எனக் கூறி வைப் கொடுத்தார்.

மேலும், "இந்நிகழ்ச்சிக்காக தன்னை மாலை 4 மணிக்கு வர சொன்னார்கள், நான் 4.30க்கு தான் வந்தேன். ஆனால், விஜய் 2 மணிக்கே வந்துவிட்டார். இந்தியாவிலேயே இப்படியொரு சூப்பர் பன்சுவாலிட்டி கொண்ட நடிகர் விஜய் மட்டும் தான். திரையில் மட்டும் இல்லை ரியலாகவும் விஜய் ஹீரோ தான். எல்லோரையும் ஈர்க்கும்படி விஜய்யிடம் அப்படி என்ன மேஜிக் இருக்கிறது எனத் தெரியவில்லை" எனக் கூறினார்.

அதேபோல், "விஜய்யை ஜேம்ஸ்பாண்ட் போல ஒரு படத்தில் பார்க்க வேண்டும்" எனவும் தனது விருப்பத்தைத் தெரிவித்தார். அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய டிடி, "விஜய் சார் மேல எவ்ளோ பாசம் இருக்குன்னு ஒரே வார்த்தைல சொல்லுங்க" எனக் கேட்டார். அதற்கு ஒரே வார்த்தையில், "தம்பி விஜய்க்காக என் நெஞ்சையே அறுத்துக் கொடுப்பேன்" என அதிரடியாகக் கூறி ஒட்டுமொத்த அரங்கத்தையே அதிர வைத்தார்.

மிஷ்கினின் இந்த பேச்சு விஜய் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. அதேநேரம் மிஷ்கின் நெஞ்சையே அறுத்துக் கொடுப்பேன் என சொன்னது, அவரது படங்களில் வரும் சைக்கோ வில்லன்களை நினைவுப்படுத்துவதாக உள்ளது என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X