Leo Success Meet: வாய்ஸ் ஓவர் மட்டும் போதுமா... லியோ வெற்றி விழாவில் கமல்..? ரசிகர்கள் வெயிட்டிங்!

சென்னை: லியோ படத்தின் வெற்றி விழா நவம்பர் 1ம் தேதி நடைபெறவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதில் படத்தின் ஹீரோ விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உட்பட லியோ படக்குழுவினர் கலந்துகொள்கின்றனர்.

லியோ ஆடியோ லான்ச் கேன்சல் ஆனதால், வெற்றி விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், லியோ வெற்றி விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 Leo Success Meet: Kamal Hassan is expected to attend Vijays Leo Success meet

லியோ வெற்றி விழாவில் கமல்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. லோகேஷின் மூன்றாவது LCU படமான லியோ, பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் வெளியானது. அதிக எதிர்பார்ப்புடன வெளியான இந்தப் படத்துக்கு முதல் நாளில் மட்டும் பெரியளவில் வரவேற்பு இருந்தது. அடுத்தடுத்த நாட்களில் எதிர்பார்த்த ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை.

இந்நிலையில், லியோ இதுவரை 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்க்ள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து லியோ வெற்றியை கொண்டாட படக்குழு ரெடியாகிவிட்டது. முன்னதாக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட லியோ ஆடியோ லான்ச் கடைசி நேரத்தில் கேன்சல் ஆனது. ரசிகர்கள் அதிகளவில் கூடினால் பாதுகாப்பு குளறுபடிகள் ஏற்படும் என ரத்து செய்யப்பட்டது.

இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்நிலையில், லியோ படத்தின் வெற்றி விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த விழாவுக்கு காவல்துறை அனுமதி கொடுத்துள்ளது. 300 கார்கள் வரை அனுமதிக்கப்படும் எனவும் வேன், பஸ்களூக்கு அனுமதி கிடையாது எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மேலும் சில கட்டுப்பாடுகளுடன் லியோ வெற்றி விழாவுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

 Leo Success Meet: Kamal Hassan is expected to attend Vijays Leo Success meet

இந்நிகழ்ச்சியில் விஜய், லோகேஷ் கனகராஜ், அனிருத், தயாரிப்பாளர் லலித் குமார் உள்ளிட்ட லியோ படக்குழுவினர் கலந்துகொள்ளவுள்ளனர். லியோ இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் குட்டி ஸ்டோரியை தவறவிட்ட ரசிகர்கள், இப்போது வெற்றி விழாவுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில், லியோ வெற்றி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவிருப்பது யார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதன்படி, லியோ சக்சஸ் மீட்டில் உலக நாயகன் கமல்ஹாசன் கலந்துகொள்ளலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. LCU-ன் கீழ் உருவாகியுள்ள லியோ படத்தில், கமல்ஹாசன் வாய்ஸ் ஓவர் கொடுத்திருந்தார். இதனால் விக்ரம் 2 அல்லது லியோ 2ம் பாகத்தில் கமல், விஜய் இணைந்து நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. இதனிடையே இப்போது லியோ வெற்றி விழாவில் கமல் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வாய்ப்பிருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X