Leo Success Meet: லியோ சக்சஸ் மீட்... ரத்னகுமார் கழுகு கதையை பட்டி டிங்கரிங் பார்த்த சன் டிவி!
சென்னை: விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது.
பாக்ஸ் ஆபிஸில் 550 கோடிக்கும் மேல் வசூலித்த இந்தப் படத்தின் வெற்றி விழா கடந்த வாரம் நடைபெற்றது.
அதில் அசோசியேட் இயக்குநர் ரத்னகுமார் சொன்ன கழுகு கதை சோஷியல் மீடியாவில் வைரலானது.
இந்நிலையில், நேற்று சன் டிவியில் ஒளிபரப்பான லியோ சக்சஸ் மீட்டில் ரத்னகுமார் பேசியது எடிட் செய்யப்பட்டது ட்ரோலாகி வருகிறது.

ரத்னகுமாரின் கழுகு கதைக்கு எடிட்டிங்: விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான லியோ திரைப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதேபோல் பாக்ஸ் ஆபிஸிலும் 550 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனையடுத்து இப்படத்தின் வெற்றிவிழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில், விஜய், த்ரிஷா, அர்ஜுன், லோகேஷ் கனகராஜ், லலித்குமார், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், மிஷ்கின் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
அப்போது லோகேஷின் நண்பரும் அசோசியேட் டைரக்டருமான ரத்னகுமார் பேசியது விஜய் ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்தது. முக்கியமாக ஜெயிலர் ஆடியோ லான்சில் ரஜினி பேசிய காகம், கழுகு கதைக்கு பதிலடி கொடுத்து பேசியிருந்தார். எவ்வளவு உயரம் சென்றாலும் உணவுக்காக கழுகு கீழே தான் வந்தாக வேண்டும் என பஞ்ச் வைத்தார். இதனால் விஜய் ரசிகர்கள் அரங்கமே அதிரும் வகையில் ஆர்ப்பரித்தனர்.
இந்நிலையில், லியோ சக்சஸ் மீட், நேற்று மாலை சன் டிவியில் ஒளிபரப்பானது. அதில், ரத்னகுமார் சொன்ன கழுகு கதை முழுதாக இருக்குமா இருக்காதா என ரசிகர்கள் ஏதிர்பார்த்திருந்தனர். ஏனெனில் ஜவான் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பற்றி அட்லீ பேசியது எடிட் செய்யப்பட்டிருந்தது. அதன்பின்னர் இந்த சம்பவம் குறித்து சன் டிவி விளக்கம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால், ரத்னகுமார் பேசிய கழுகு கதை எடிட் செய்யப்படலாம் என சொல்லப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை என்றாலும், இன்னொரு ட்விஸ்ட் வைத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது சன் டிவி. அதாவது ரத்ன குமார் கழுகு கதையை சொல்லி முடித்ததும், ரசிகர்கள் ஆர்ப்பரிக்கும் காட்சிகளை எடிட் செய்து தூக்கிவிட்டனர். இதனால், ரத்னகுமாரின் கழுகு கதை பெரிய வைப் கொடுக்கவில்லை.
ரஜினியின் தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்திலும் ரத்னகுமார் பணியாற்றவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுபற்றி லோகேஷ் கனகராஜ்ஜோ ரத்னகுமாரோ இதுவரை எதுவும் அப்டேட் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











