தளபதி விஜய் தான் அடுத்த சிஎம்.. லியோ வெற்றி விழாவில் அலப்பறை கிளப்பிய ரசிகர்கள்.. தெறிக்கும் வீடியோ!

சென்னை: லியோ படத்தின் வெற்றி விழாவா அல்லது நடிகர் விஜய்யின் மக்கள் இயக்க அரசியல் மாநாடா என்றே தெரியாத அளவுக்கு ஏகப்பட்ட போஸ்டர்கள் அரசியல் வாசகங்கள் அடங்கிய பேனர்களும் நேரு ஸ்டேடியத்தில் நிரம்பி வழிகின்றன.

புஸ்ஸி ஆனந்த் தலைமையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் 4800 பேரும் ரசிகர்கள் சிலரும் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leo Success Meet venue fans says Thalapathy Vijay is the next CM of Tamil Nadu

லியோ வெற்றி விழா லைவ் நிகழ்ச்சி இல்லை என்றாலும், உள்ளே சென்றுள்ள ரசிகர்கள் மொபைல் கேமரா மூலம் வீடியோக்களை எடுத்து வெளியிட்டு வருகின்றனர்.

விஜய் தான் அடுத்த சிஎம்: நடிகர் ரஜினிகாந்தை போல அரசியலுக்கு வரப் போகிறேன் என அறிவித்து தனது சினிமாவை ஓட விடமாட்டார் விஜய் என்றும் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்றும் அடுத்த சிஎம் விஜய் தான் என்றும் அலப்பறையை கிளப்பி வருகின்றனர். உடை முழுவதும் விஜய் புகைப்படங்களை ஒட்டிக் கொண்டு விஜய் ரசிகர்கள் அரங்கத்துக்குள் நுழைந்து வரும் நிலையில், நேரு ஸ்டேடியம் வெளியே மிகப்பெரிய கூட்ட நெரிசலும் உருவாகி உள்ளது.

குவியும் ரசிகர்கள்: பாஸ் உள்ள ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருவதாக அறிவித்துள்ள நிலையிலும், பாஸ் இல்லாமலும் ஏகப்பட்ட விஜய் ரசிகர்கள் நேரு ஸ்டேடியத்துக்கு வெளியே கூடியிருப்பதால் அசம்பாவிதம் ஏதும் நேராமல் இருக்க வேண்டும் என்றும் விஜய் ரசிகர்களே வேண்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X