Leo Success Meet: ரூ.10,000 VIP பாஸ்... லியோ சக்சஸ் மீட்டில் அனுமதி இல்லை... கதறிய விஜய் ரசிகர்கள்!

சென்னை: அக்டோபர் 19ம் தேதி வெளியான லியோ படத்தின் வெற்றி விழா நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் விஜய், லோகேஷ் கனகராஜ், த்ரிஷா, மிஷ்கின், அனிருத் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

 Leo Success Meet: Vijay fans are not allowed in the Leo Success Meet despite having a VIP pass

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ரசிகர்களும் அதிகளவில் திரண்டுள்ளனர்.

இந்நிலையில் 10000 ரூபாய் கொடுத்து வாங்கிய விஐபி பாஸ் இருந்தும், லியோ வெற்றி விழாவை பார்க்க அனுமதி கொடுக்கவில்லை என விஜய் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

 Leo Success Meet: Vijay fans are not allowed in the Leo Success Meet despite having a VIP pass

ரூ.10,000 VIP பாஸ் இருந்தும் அனுமதி இல்லை: விஜய் - லோகேஷ் கூட்டணியில் வெளியான லியோ திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதனையடுத்து இப்படத்தின் வெற்றி விழா நடத்த படக்குழு முடிவு செய்திருந்தது. அதன்படி, சென்னை நேரு ஸ்டேடியத்தில் லியோ படத்தின் வெற்றி விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

முன்னதாக படம் ரிலீஸாகும் முன்பு, லியோ இசை வெளியீட்டு விழா, கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக லியோ ஆடியோ லான்ச் கேன்சல் செய்யப்பட்டதாகவும், இதற்கு அரசியல் அழுத்தம் காரணமில்லை எனவும் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், லியோ வெற்றி விழாவுக்கு போலீஸார் அனுமதியுடன் ஏகப்பட்ட கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன.

 Leo Success Meet: Vijay fans are not allowed in the Leo Success Meet despite having a VIP pass

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தான் அதிகளவில் கலந்துகொண்டதாக தெரிகிறது. அவர்களுக்கும் லியோ சக்சஸ் மீட் பாஸ், ஆதார் அட்டை, மக்கள் இயக்கம் ஐடி கார்டு ஆகியவை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பணம் கொடுத்தும் லியோ வெற்றி விழாவுக்கு ரசிகர்கள் பாஸ் வாங்கியுள்ளனர். ஆனால் அவர்களில் பலருக்கும் லியோ வெற்றி விழா அரங்கிற்குள் செல்ல அனுமதி கொடுக்கவில்லை.

இதனால், விஜய் ரசிகர்கள் நேரு ஸ்டேடியம் வெளியே நின்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 10,000 ரூபாய் கொடுத்து விஜபி பாஸ் வாங்கியும் உள்ளே செல்ல அனுமதி தரவில்லை என புலம்பித் தீர்த்துள்ளனர். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதனைப் பார்த்த ப்ளூ சட்டை மாறன், "படத்தோட டிக்கட்டை ப்ளாக்ல வித்தானுங்க. இப்ப சக்ஸஸ் மீட் டிக்கட்டையும்.. பல ஆயிரத்துக்கு விக்கிறானுங்க போல‌. இதெல்லாம் ஒரு பொழப்பு" என விமர்சித்துள்ளார்.

 Leo Success Meet: Vijay fans are not allowed in the Leo Success Meet despite having a VIP pass

மேலும், "லியோ சக்ஸஸ் மீட்: உள்ளே செல்ல அனுமதி கிடைக்காத கடுப்பில் கதறும் ரசிகர். 'நீ என்ன கத்துனாலும் தயாரிப்பாளரும், தளபதியும் உன்னை உள்ள கூட்டிட்டு போக வரப்போறது இல்ல. வீடு போய் சேரு. சினிமா நடிகனுக்காக பணத்தையும், நேரத்தையும் வீணடிக்காத. உருப்பட பாரு" என ரசிகர்களையும் கலாய்த்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் ஏஆர் ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியிலும், ரசிகர்கள் பலர் டிக்கெட் இருந்தும் உள்ளே செல்ல முடியாமல் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X