Leo Success Meet: சன் டிவியில் விஜய்யின் லியோ சக்சஸ் மீட்... தாறுமாறாக வெளியான ப்ரொமோ!
சென்னை: விஜய்யின் லியோ வெற்றி விழா கொண்டாட்டம் நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
லியோ ஆடியோ லான்ச் கேன்சல் ஆனதால் ஏமாற்றத்தில் இருந்த விஜய் ரசிகர்களுக்கு, சக்சஸ் மீட் நடந்தது ஆறுதலாக அமைந்தது.
அதேநேரம் லியோ சக்சஸ் மீட்டை நேரில் பார்க்க முடியாமல் ரசிகர்கள் பலர் கவலையில் இருந்தனர்.
இந்நிலையில், லியோ சக்சஸ் மீட் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக தாறுமாறான ப்ரொமோவுடன் அப்டேட் வெளியாகியுள்ளது.

சன் டிவியில் லியோ சக்சஸ் மீட்
விஜய்யின் லியோ திரைப்படம் அதிக எதிர்பார்ப்புகளுடன் கடந்த மாதம் வெளியானது. இந்தப் படம் விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவானதால், உலகம் முழுவதும் நல்ல ஓபனிங் கிடைத்தது. இதனால், இதுவரை 550 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து மாஸ் காட்டி வருகிறது. அதேநேரம் நெகட்டிவான விமர்சனங்களும், ட்ரோல்களும் லியோவுக்கு பின்னடைவை ஏற்படுத்தின.
இந்நிலையில், லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில், விஜய், த்ரிஷா, அர்ஜுன், லோகேஷ் கனகராஜ், லலித் குமார், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், மிஷ்கின் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர். அதேபோல், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், ரசிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் நேரு ஸ்டேடியத்தில் திரண்டிருந்தனர்.
விழா மேடையில் செம்ம ஃபயரிங் மோடில் என்ட்ரியான விஜய், நிகழ்ச்சியின் இறுதியில் அட்டகாசமான ஸ்பீச் கொடுத்து ரசிகர்களுக்கு வைப் கொடுத்தார். தளபதி டைட்டில், அரசியல் என்ட்ரி தொடங்கி குட்டி ஸ்டோரி வரை விஜய்யின் எனர்ஜி வேற லெவலில் இருந்தது. இதனால், அரங்கம் முழுவதும் நான்ஸ்டாப்பாக அதிர்ந்துகொண்டே இருந்தது. விஜய் உட்பட பிரபலங்கள் பேசிய வீடியோக்கள், டிவிட்டரில் வைரலாகின.
இதனால், முழு நிகழ்ச்சியையும் பார்க்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். அவர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ் அப்டேட் கொடுத்துள்ளது சன் டிவி. அதாவது லியோ சக்சஸ் மீட் நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. தாறுமாறான ப்ரொமோவுடன் வெளியான இந்த அப்டேட்டால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அதன்படி, வரும் ஞாயிற்றுக் கிழமை (அக்.5) மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.

சன் டிவியின் ப்ரொமோ வெளியானதை அடுத்து மீண்டும் லியோ சக்சஸ் மீட் வைப்பில் வந்துவிட்டனர் விஜய் ரசிகர்கள். வரும் 5ம் தேதி மாலை விஜய்யின் முழு பேச்சையும் கேட்க ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அதேநேரம் விஜய்யின் பேச்சு எடிட்டிங் இல்லாமல் டெலிகாஸ்ட் ஆகுமா என்பதே இப்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications











