Rajini: “ஆல் தி பெஸ்ட் லோகேஷ்... விஜய்யின் லியோ சக்சஸ் தான்..” க்யூட்டாக வாழ்த்து சொன்ன ரஜினி!

சென்னை: லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ வரும் 19ம் தேதி வெளியாகவுள்ளது.

லியோவைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் 2024 பிப்ரவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 Leo: Superstar Rajini Wished Lokesh Kanagaraj for the Success of Leo

இந்நிலையில், விஜய்யின் லியோ சக்சஸுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி செம்ம க்யூட்டாக வாழ்த்துத் தெரிவித்துள்ளாராம்.

லியோ சக்சஸ்க்கு தலைவர் வாழ்த்து: லோகேஷ் கனகராஜ்ஜின் 5வது படமாக உருவாகியுள்ளது லியோ. மாநகரம், கைதி படங்களுக்குப் பின்னர், தனது மூன்றாவது படமான மாஸ்டரில் விஜய்யுடன் இணைந்தார் லோகேஷ். மாஸ்டர் கொடுத்த சூப்பர் ஹிட்டால், அடுத்து உலக நாயகன் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கினார். விக்ரம் படமும் விஸ்வரூப ஹிட் கொடுக்க, மீண்டும் விஜய்யுடன் இணைந்தார் லோகேஷ்.

அதன்படி, இரண்டாவது முறையாக கூட்டணி வைத்துள்ள விஜய் - லோகேஷ் காம்போவில் லியோ உருவாகியுள்ளது. இந்தப் படம் வரும் 19ம் தேதி வெளியாகவுள்ளதால் அதற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே லோகேஷ் கனகராஜ்ஜின் அடுத்தப் படம் பற்றிய அப்டேட் கடந்த மாதமே வெளியானது. அதன்படி, சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள தலைவர் 171 ஷூட்டிங், 2024 பிப்ரவரி மாதம் தொடங்கும் எனத் தெரிகிறது. லியோ ரிலீஸானதுமே தலைவர் 171 படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளை தொடங்கவுள்ளாராம் லோகேஷ். அதேநேரம் தலைவர் 171 கதையை மாநகரம் படத்தை இயக்கும் முன்பே எழுதிவிட்டதாக லோகேஷ் கூறியிருந்தார். ஆனால், அப்போது ரஜினிக்குப் பதிலாக வேறு ஹீரோவை நடிக்க வைக்கலாம் என லோகேஷ் நினைத்திருந்தாராம்.

இதனால், லியோவைத் தொடர்ந்து தலைவர் 171 படம் மீதும் ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் லியோ ப்ரோமோஷன் பேட்டிகளில் தலைவர் 171 பற்றியும் சில தகவல்களை கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். அதேநேரம், லியோ படம் பற்றியும் சூப்பர் ஸ்டார் ரஜினி லோகேஷிடம் பேசியது தற்போது தெரியவந்துள்ளது. தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் ரஜினிகாந்த்.

 Leo: Superstar Rajini Wished Lokesh Kanagaraj for the Success of Leo

இதன் காரணமாக லோகேஷ் கனகராஜ்ஜை செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார் ரஜினி. அப்போது லியோ ட்ரெய்லரை பாராட்டிய சூப்பர் ஸ்டார், "ஆல் தி பெஸ்ட் லோகேஷ்... லியோ வெற்றி பெற வாழ்த்துகள்" என க்யூட்டாக விஷ் செய்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் இருந்து எதிர்பாராத நேரத்தில் வந்த வாழ்த்துச் செய்தியால், லோகேஷ் கனகராஜ் செம்ம உற்சாகமாக காணப்படுகிறார். அதேநேரம் தலைவர் 171 கதையை விஜய்யிடம் சொல்லி, அதற்கும் தளபதியிடம் இருந்து பாராட்டு வாங்கியுள்ளார் லோகேஷ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X