Leo: லியோவில் விஜய்யுடன் மோதும் ரோலக்ஸ்... லோகேஷ் இப்படியொரு ட்விஸ்ட் வைப்பார்ன்னு எதிர்பார்க்கலயே!
சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
இந்தப் படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் LCU கான்செப்ட்டில் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய்தத், மிஷ்கின், கெளதம் மேனன், த்ரிஷா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

முக்கியமாக விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கேரக்டரில் தெறிக்கவிட்ட சூர்யாவும் லியோவில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லியோவில் விஜய்யுடன் மோதும் ரோலக்ஸ் : விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படம் லியோ. விஜய்யின் 67வது படமாக உருவாகியுள்ள லியோ, அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. 125 நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்ட லோகேஷ் கனகராஜ், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாகிவிட்டார். அதேநேரம் லியோ ஃபர்ஸ்ட் சிங்கிள், சஞ்சய்தத் கேரக்டரான ஆண்டனி தாஸ் க்ளிம்ப்ஸ், அர்ஜுனின் ஹெரால்ட் தாஸ் க்ளிம்ப்ஸ் ஆகியவையும் வெளியானது.
லியோ படத்தில் இருந்து வெளியாகும் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யுடன் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கெளதம் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் படமாக லியோ உருவாவதும் அதிகம் எதிர்பார்க்க வைத்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்திலும் கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், நரேன், செம்பன் வினோத் என டாப் ஹீரோக்கள் நடித்திருந்தனர். முக்கியமாக க்ளைமேக்ஸில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் சூர்யா தெறிக்க விட்டிருந்தார். சூர்யாவின் காட்சிகள் ஐந்து நிமிடங்கள் மட்டுமே இருந்தாலும் அவரது கேரியரில் லைஃப் டைம் செட்டில்மெண்ட் கொடுக்கும் விதமாக அமைந்தது.
இதனால், ரோலக்ஸ் கேரக்டரை தனி படமாகவே இயக்க லோகேஷ் முடிவு செய்துள்ளாராம். அதற்கு சூர்யாவும் ஓக்கே சொல்லிவிட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. அதேபோல், லோகேஷின் LC யுனிவர்ஸ் படங்களில் ரோலக்ஸ் கேரக்டர் கண்டிப்பாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. அதன்படி லியோ LC யுனிவர்ஸ் கான்செப்ட்டில் உருவாகி இருந்தால், அதில் சூர்யா நடித்திருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.
தற்போது அதுகுறித்து தரமான அப்டேட் கிடைத்துள்ளது. விக்ரம் படத்தில் கைதியில் நடித்த கார்த்தியின் டெல்லி கேரக்டர் இடம்பெற்றிருந்தது. அதாவது அவரது வாய்ஸ் ஓவரை மட்டும் வைத்து ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்திருந்தார் லோகேஷ். அதேபோல், லியோ படத்தில் விஜய்யும் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டரும் போனில் பேசிக்கொள்வது போல செம்ம மாஸ் சீன் வைத்துள்ளாராம் லோகேஷ்.
இந்த சீன் தான் லியோ படத்தில் செம்ம ட்விஸ்ட்டாக இருக்கும் என படக்குழு தரப்பில் இருந்து தெரியவந்துள்ளது. அதேபோல், விக்ரம் படத்தில் இருந்து கமல், ஃபஹத் பாசில் ஆகியோரது காட்சிகள் அல்லது வாய்ஸ் ஓவர் ஆகியவை லியோவில் இடம்பெற்றிருக்கலாம் எனவும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











