Leo Box Office: லாபமே இல்லாமல் லியோவை போட முடியாது.. தமிழ்நாட்டில் லியோ வசூல் எப்படி இருக்கும்?
சென்னை: ஒரு பக்கம் லியோ படத்துக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். அனைத்து டிக்கெட்டுகளும் அர்த்த ராத்திரியில் ஓபன் செய்யப்பட்டு அடுத்த நொடியே மாயமாகி விட்டது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் புக் செய்து அதிக விலைக்கு விற்பதாக ஒரு பக்கம் குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன. பல ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.

இன்னொரு பக்கம் ரோகிணி, வெற்றி உள்ளிட்ட பிரபல திரையரங்குகள் லியோ படத்தை திரையிடவே போவதில்லை என்கிற முடிவில் உள்ளன.
பேராசை படுகிறாரா லலித்?: டிக்கெட் விற்பனையில் 80 சதவீதம் ஷேர் வேண்டும் என தயாரிப்பாளர் லலித் வைத்த கோரிக்கை தான் கடைசி நேரம் வரை டிக்கெட் புக்கிங்கை தொடங்காமல் இருந்ததற்கான காரணம் என்கின்றனர். சில திரையரங்குகள் 70 முதல் 75 சதவீதத்திற்கு சம்மதித்து டிக்கெட் புக்கிங்கை ஆரம்பித்து இருப்பதாக கூறுகின்றனர். ஆனால், சைன் பண்ணவில்லை என்பதை மட்டுமே சொல்லி வந்த திரையரங்க உரிமையாளர்கள் யாருமே வெளிப்படையான காரணத்தையும் பிரச்சனை எப்படி தீர்வானது என்பது குறித்தும் விளக்கவில்லை.
ரோகிணி பஞ்சாயத்து: தியேட்டரை அடித்து நொறுக்கினாலும், விஜய் அண்ணா என்னிடம் பேசினார். 4 மணிக்கே ஷோ போட நாங்க ரெடி என ரேவந்த் சரண் தொடர்ந்து பேட்டியாக கொடுத்து வந்த நிலையில், கடைசி நேரத்தில் படமே ரிலீஸ் கிடையாது என்கிற முடிவு எடுக்க என்ன காரணம்? என்கிற கேள்வியும் பூதாகரமாக கிளம்பி உள்ளது.
தமிழ்நாட்டில் வசூல் எப்படி இருக்கும்?: லியோ திரைப்படம் மற்ற மாநிலங்களில் அதிகாலை 4 மணி முதலே ஷோக்களை போடவுள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு டிக்கெட் புக்கிங் நடைபெற்றுள்ளதாக கூறுகின்றனர். ஆனால், தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தியேட்டர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் முதல் நாள் வசூல் இங்கே 20 முதல் 25 கோடி வரை வருவதே சிரமம் தான் என்கின்றனர்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: லியோ படம் தொடங்கும் போது இருந்த எந்தவொரு ஆர்வமும் லலித் குமாரிடம் முடியும் நேரத்தில் இல்லை என ரசிகர்களே விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், லியோ படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையாவது வெளியிடுவாரா? அல்லது அமைதியாக கடந்து விடுவார்களா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











