Trisha Birthday: லைஃப் டைம் பர்த்டே கிஃப்டை கொடுத்த லியோ டீம்.. நடிகை த்ரிஷா செம ஹேப்பி!
சென்னை: நடிகை த்ரிஷா தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், லியோ படத்தில் இருந்து பிரத்யேகமான ஒரு ஸ்டில்லை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.
கில்லி, திருப்பாச்சி, குருவி, ஆதி என 4 படங்களில் விஜய்யுடன் ஜோடி போட்டு நடித்து வந்த நடிகை த்ரிஷா 5வது முறையாக விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் இணைந்துள்ளார்.

14 ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிப்பது தனக்கு மிகவும் ஹேப்பியான தருணம் எனக் கூறியிருந்த நடிகை த்ரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி ரசிகர்கள் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
எவர்க்ரீன் பியூட்டி த்ரிஷா: மெளனம் பேசியதே படத்தில் அறிமுகமான த்ரிஷா சாமி, கில்லி, திருப்பாச்சி, குருவி, கிரீடம், மங்காத்தா, விண்ணைத் தாண்டி வருவாயா, பேட்ட, 96, பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2 மற்றும் லியோ என பல ஆண்டுகளாக தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக ஜொலித்து வருகிறார்.
இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருக்கும் நடிகை த்ரிஷா கோலிவுட்டின் எவர்க்ரீன் பியூட்டியாக கெத்துக் காட்டி வருகிறார். பொன்னியின் செல்வன் 2 ப்ரமோஷனுக்காக பட்டுச் சேலைகளை அணிந்து கொண்டு த்ரிஷா செய்த ப்ரமோஷன்களை பார்த்து பல ரசிகர்கள் பித்துப் பிடித்துப் போயுள்ளனர்.

கேக் வெட்டிக் கொண்டாட்டம்: நடிகை த்ரிஷா தனது பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடி உள்ளார். லியோ படக்குழுவினர் உடனும் த்ரிஷா பிறந்தநாள் கொண்டாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
காஷ்மீரில் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்ட த்ரிஷாவின் புகைப்படங்கள் வெளியாகி டிரெண்டான நிலையில், த்ரிஷா பிறந்தநாளை முன்னிட்டு லியோ படக்குழு சூப்பரான போட்டோ ஒன்றை பரிசாக வெளியிட்டுள்ளது.
த்ரிஷாவின் பிறந்தநாள் பரிசு: லியோ படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்து வரும் த்ரிஷா அவருடன் பேக்கரி ஒன்றில் இருக்கும் லியோ படத்தின் பிரத்யேக ஸ்டில்லை தற்போது செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு நடிகை த்ரிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

நடிகை த்ரிஷாவும் இப்படியொரு லைஃப் டைம் கிஃப்ட் கிடைத்ததற்காக லியோ தயாரிப்பு நிறுவனத்துக்கும் லியோ படக்குழுவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
விஜய்யின் லேட்டஸ்ட் லுக்: சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலில் காஷ்மீரில் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட நடிகர் விஜய் மனோபாலாவின் மறைவை அறிந்ததும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெள்ளை சட்டை அணிந்து கொண்டு நெற்றியில் குங்குமம் எல்லாம் வைத்துக் கொண்டு கருப்பு தலைமுடியுடன் வந்து இறுதி அஞ்சலி செலுத்திய நிலையில், லியோ படத்தில் வெரைட்டியான லுக்கில் விஜய் வரப்போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பை எகிற விட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











