Leo Teaser: லியோ ஆடியோ லாஞ்ச் இல்லைன்னா என்ன? செப்.30 விஜய் ரசிகர்களுக்கு செம ட்ரீட் ரெடியாகுதாம்!
சென்னை: விஜய்யின் லியோ படத்தின் பயங்கர புரமோஷனாக ஆடியோ வெளியீட்டு விழா அமையும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
மதுரை, கோவை என தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தப் போவதாகவும் மலேசியாவில் இசை வெளியீட்டு விழா நடத்தப் போவதாகவும் லியோ படக்குழு திட்டமிட்டதாக ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகின.

கடைசியில் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற இருந்த லியோ ஆடியோ வெளியீட்டு விழாவே ரத்தாகி விட்ட நிலையில், அதே செப்டம்பர் 30ம் தேதி விஜய் ரசிகர்களின் மன வலியை போக்க மருந்தாக செம அப்டேட்டை லியோ படக்குழு வெளியிடப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
லியோ டீம் சொன்ன காரணம்: லியோ ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிக டிக்கெட்டுகளுக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்த நிலையில், ஓவர் கிரவுட் ஆகி ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் பெரிய சிக்கல் ஆகிவிடும் என்பதால் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவையே ரத்து செய்யப் போவதாக தயாரிப்பு நிறுவனம் சொன்ன காரணத்தை ரசிகர்கள் கொஞ்சமும் ஏற்கவில்லை. இதற்கு பின்னால் பெரிய சதி இருப்பதாக ஏகப்பட்ட ட்வீட்களை போட்டு வருகின்றனர்.
லியோ டீசர் வருதாம்: கண்டிப்பாக செப்டம்பர் 30ம் தேதி மீண்டும் விஜய் ரசிகர்கள் விரக்தியின் உச்சத்திற்கே சென்று விடுவார்கள் என்பதால், அவர்களை சந்தோஷத்தில் ஆழ்த்த லியோ படத்தின் டீசரை வெளியிடுங்க என்கிற உத்தரவை அதிரடியாக தளபதி போட்டு இருப்பதாகவும் அதற்கான பணிகளை லியோ படக்குழு ஆரம்பித்து இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
செகண்ட் சிங்கிள் எப்போ?: இந்தியா முழுவதும் பல படங்களில் பிசியாக இருக்கும் அனிருத் ஆடியோ லாஞ்சுக்காக தீயாக வேலை செய்து வந்த நிலையில், லியோ ஆடியோ வெளியீட்டு விழா ரத்து என தெரிந்த நிலையில், செகண்ட் சிங்கிளையாவது சீக்கிரமே ரசிகர்களுக்கு கொடுத்து விடலாம் என்கிற முடிவில் இருப்பதாகவும் அதிரடியாக செகண்ட் சிங்கிளும் விரைவில் வர அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகின்றனர்.
ஸ்பெஷல் பேட்டி: நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ், த்ரிஷா உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்கும் ஸ்பெஷல் பேட்டியையும் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கவும் லியோ படக்குழு ஏற்பாடு செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. லியோ படத்தின் ரிலீஸுக்கு முன்பாக தளபதி விஜய்யின் பேச்சு தான் அந்த படத்தின் புரமோஷனையே உச்சத்துக்கு கொண்டு செல்லும் என்பதால், கண்டிப்பாக பேட்டியை ரெடி செய்யும் பணிகளையும் ஆரம்பித்து விட்டார்கள் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











