இப்பவாச்சும் நம்புங்க.. லியோ ஃபிளாஷ்பேக் ஃபேக் தான்.. அதிரடியா அந்த சீனை வெளியிட்ட லியோ படக்குழு!

சென்னை: லியோ படத்தின் ஃபிளாஷ்பேக்கை மன்சூர் அலி கான் சொன்ன நிலையில், அந்த ஃபிளாஷ்பேக் போர்ஷனே ஃபேக்காக இருக்க வாய்ப்புகள் அதிகம் என சமீபத்திய டீகோடிங் பேட்டியில் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார்.

லியோ படத்தின் இயக்குநர் என்றும் பாராமல் அடுத்து தலைவர் 171 படத்தின் இயக்குநர் என்றும் பாராமல் லோகேஷ் கனகராஜ் படத்தின் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் முட்டு பாயாக மாறிவிட்டார் என ப்ளூ சட்டை மாறன், வலைப்பேச்சு அந்தணன் உள்ளிட்ட பலரும் ட்ரோல் பண்ண ஆரம்பித்தனர்.

leo team released Mansoor Ali Khans perspective deleted dialogue

இந்நிலையில், லோகி பொய் சொல்ல மாட்டாருப்பா என்பதற்கு அதிரடி விளக்கம் கொடுக்கும் விதமாக சஸ்பென்ஸுக்காக டெலிட் பண்ணதாக சொன்ன அந்த சீனையும் தற்போது வெளியிட்டுள்ளனர்.

இருதயராஜ் டிசோசா: கைதி படத்தில் மன்சூர் அலி கானையே ஹீரோவாக வைத்து எடுக்கலாம் என நினைத்த லோகேஷ் கனகராஜ் லியோ படத்தில் அவருக்கு முக்கியமான கதாபாத்திரத்தை வழங்கி இருந்தார்.

லியோ தாஸ் யாரு, ஆண்டனி தாஸ் யாரு, ஹரோல்ட் தாஸ் மற்றும் எலிசா யாரு என அனைத்தையும் ரசிகர்களுக்கு சொல்லி லியோ தாஸ் உலகத்துக்கே நம்மை கொண்டு சென்றவர் இருதயராஜ் டிசோசா கதாபாத்திரத்தில் நடித்த மன்சூர் அலி கான் தான்.

leo team released Mansoor Ali Khans perspective deleted dialogue

அது ஃபேக்: விருமாண்டி படத்தில் பசுபதி வெர்ஷன் ஃபிளாஷ்பேக்கில் கமல் கெட்டவன் போல சித்தரிக்கப்பட்டு இருக்கும். ஆனால், கமல் வெர்ஷனில் அதுதான் உண்மை எனக் கூறப்பட்டு இருக்கும். இந்நிலையில், அதே போன்றதொரு ஃபேக் ஃபிளாஷ்பேக் ட்ரீட்மென்ட்டை லியோவில் லோகேஷ் கனகராஜ் வைத்திருப்பதாக சொல்லி வந்த நிலையில், அதற்கு நீதி செய்யும் வகையில் எடுக்கப்பட்ட மன்சூர் அலி கானின் வசனத்தை கடைசி டிராஃப்டில் நீக்கிவிடலாம் என எடிட்டர் பிலோமின் சொல்லியிருந்ததாக கூறியிருந்தார். இந்நிலையில், அந்த டெலிட் செய்யப்பட்ட காட்சியை தற்போது வெளியிட்டுள்ளனர்.

என்னோட பர்ஸ்பெக்டிவ்: ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பர்ஸ்பெக்டிவ் இருந்திருக்கும். இது என்னோட பர்ஸ்பெக்டிவ் என மன்சூர் அலி கான் லியோ தாஸ் கதையை சொல்லும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. அந்த காட்சிகள் வெளியான நிலையில், லியோ 2 படத்தை பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 540 கோடி வசூல் செய்து இண்டஸ்ட்ரி ஹிட் அடித்துள்ள நிலையில், தாராளமாக லியோ 2வை உருவாக்கலாம் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X