Leo Telugu Review: “லியோ சாலா சூப்பர்... விஜய் அண்ணய்யா வேற லெவல்” வைப் கொடுத்த டோலிவுட் ரசிகர்கள்!
ஐதராபாத்: விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் இன்று ரிலீஸாகியுள்ளது.
பான் இந்தியா படமான லியோ மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் 'பகவந்த் கேசரி' படத்துக்குப் போட்டியாக லியோ வெளியாகியுள்ளது.
பாலய்யாவின் பகவந்த் கேசரி படத்தை விஜய்யின் லியோ பந்தாடியுள்ளதாக டோலிவுட் ரசிகர்கள் வைப் கொடுத்துள்ளனர்.

லியோ சாலா சூப்பர்
விஜய்யின் லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். லலித் குமார் தயாரித்துள்ள லியோ, பான் இந்தியா படமாக 5 மொழிகளில் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் ரிலீஸான லியோ, அனைத்து ஏரியாக்களிலும் ரவுண்டு கட்டி மாஸ் காட்டுகிறதாம். அதிகாலை முதலே லியோ விமர்சனம் டிவிட்டரில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் மட்டுமே காலை 9 மணிக்கு லியோ முதல் ஷோ திரையிடப்பட்டது. கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மற்ற பகுதிகளில், அதிகாலை 4 மணிக்கே லியோ திரையிடப்பட்டது. தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்துள்ள பகவந்த் கேசரி, கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் கோஸ்ட் ஆகிய படங்களும் இன்று வெளியாகியுள்ளன.

தெலுங்கில் பாலய்யாவின் பகவந்த் கேசரி படத்துக்குப் போட்டியாக வெளியான லியோ, டோலிவுட் ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்துள்ளதாம். லியோ படம் பற்றி தெலுங்கு ரசிகர்கள் பாசிட்டிவாக விமர்சனம் கொடுத்துள்ளனர். அதாவது பாலய்யாவின் பகவந்த் கேசரியும் விஜய்யின் லியோவும் இன்று வெளியாகியுள்ளது. இதில் விஜய்யின் லியோ தான் எங்கள் ஃபேவரைட் எனக் கூறியுள்ளனர்.
மேலும், தெலுங்கிலும் ஹிட் கொடுக்கும் தமிழ் ஹீரோ விஜய் தான் எனவும் கெத்து காட்டியுள்ளனர். சாலா சூப்பர்... லியோ கண்டிப்பா ப்ளாக் பஸ்டர் மூவி என்றும் அவர்கள் பாசிட்டிவாக விமர்சனம் செய்துள்ளனர். விஜய்யின் ஆக்ஷன் சீன்ஸ் முழுக்க கூஸ்பம்ஸ்ஸாக இருப்பதாகவும், வேற படம் LCU-ல் வேற லெவலில் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் லியோ திரைப்படம் தெலுங்கில் 100 கோடி வசூல் செய்வது கன்ஃபார்ம் எனவும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக விஜய் - லோகேஷ் காம்போவில் லியோ கண்டிப்பாக தியேட்டரில் பார்க்க வேண்டிய படம் எனக் கூறியுள்ள டோலிவுட் ரசிகர்கள், விஜய் அண்ணய்யா 1000 கோடி பாக்ஸ் ஆபிஸில் என்ட்ரி கொடுப்பார் என்பதையும் ஆணித்தரமாக கூறியுள்ளனர். இதன் மூலம் தமிழ், மலையாளத்தைத் தொடர்ந்து தெலுங்கிலும் விஜய்யின் லியோவுக்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications