Leo Ban: லியோ படத்துக்கு திடீர் தடை.. அடுத்து வந்த அடுத்த தலைவலி.. அக்., 20 வரை ரிலீஸ் இல்லையாம்!
ஹைதராபாத்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள லியோ வரும் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக உள்ள நிலையில் பல திரையரங்குகளில் இன்னமும் டிக்கெட் புக்கிங் தொடங்கவில்லை.
லியோ படத்தின் விநியோகஸ்தர்கள் அதிகபட்சமாக 80% ஷேர் கேட்பதாகவும் திரையரங்குகளின் வருமானம் பாதிக்கும் என்பதால் இன்னமும் சென்னையில் பல முன்னணி திரையரங்குகள் லியோ படத்திற்கான டிக்கெட் முன்பதிவை தொடங்கவில்லை.

அக்டோபர் 20 வரை ரிலீஸ் செய்யக் கூடாது: இது ஒரு பக்கம் இருக்க, ஆந்திராவில் லியோ தெலுங்கு ரிலீஸை அக்டோபர் 20 வரை ஒத்திவைக்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லியோ படத்தின் டைட்டில் பிரச்சனை காரணமாக தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார். லியோ படத்தின் தமிழ் டப்பிங் ரிலீஸ் ஆந்திராவில் எந்த ஒரு பிரச்சனையும் இன்றி வெளியாகும் என்றும் அதன் தெலுங்கு பதிப்பு மட்டும் தான் டைட்டில் பிரச்சனை காரணமாக சிக்கலை சந்தித்து இருப்பதாகவும், அதனையும் விரைவில் சரிசெய்து அக்டோபர் 19-ஆம் தேதியே திட்டமிட்டபடி வெளியிட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாக லியோ படத்தின் தெலுங்கு வெளியிட்டு உரிமையை பெற்றுள்ள சித்தாரா என்டர்டைன்மென்ட் அறிவித்துள்ளது.
சோதனை மேல் சோதனை: இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்திற்கு கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி வச்சது போல இருக்கே என விஜய் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

லியோ படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கேட்டு நீதிமன்றத்தை நாடிய நிலையிலும், தயாரிப்பு நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லை என்பது ஏற்கனவே படக்குழுவுக்கு சிக்கலை கொடுத்துள்ள நிலையில், ஆந்திராவில் லியோ தெலுங்கு வெர்ஷனே ஒரு அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸ் ஆவதில் இப்படி ஒரு சிக்கல் உருவாகி இருப்பது மிகப்பெரிய தலைவலியை உண்டாக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் லியோ திரைப்படம் பல திரையரங்குகளில் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாகவில்லை என்றால் முதல் நாள் வசூலில் மிகப்பெரிய பின்னடைவை லியோ திரைப்படம் சந்திக்கும் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











