Leo Third Single - லியோ மூன்றாவது சிங்கிள் எப்போது?.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: Leo Third Single (லியோ மூன்றாவது சிங்கிள்) லியோ படத்தின் மூன்றாவது சிங்கிளான அன்பெனும் பாடல் எப்போது ரிலீஸாகும் என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் அந்தப் படம் கண்டிப்பாக மெகா ஹிட்டாகும் என்று விஜய்யின் ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையில் இருக்கின்றனர். ஏனெனில் இதற்கு முன்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த விக்ரம் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leo Third Single Anbenum Song Is Releasing Tommorrow

ட்ரெய்லர்: சூழல் இப்படி இருக்க படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 5ஆம் தேதி ரிலீஸானது. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் எதிர்பார்த்ததைவிடவும் படம் ஸ்டைலிஷாகவும், ஆக்‌ஷனாகவும் வந்திருப்பது உறுதியாகியிருப்பதாக கொண்டாடுகின்றனர். அதேசமயம் ட்ரெய்லரில் விஜய் கெட்ட வார்த்தை பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல் அளவுக்கதிகமான வன்முறை காட்சிகளும் இடம்பெற்றிருப்பதாக ஒரு கருத்து எழுந்திருக்கிறது.

ப்ரீமியர் ஷோ: லியோ படத்துக்கான அதிகாலை காட்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக வேறு வழியை யோசித்த படக்குழு ரிலீஸுக்கு முதல்நாள் பெய்டு ப்ரீமியர் ஷோவை திரையிடவிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே ரிலீஸுக்கு முன்னதாகவே படம் 400 கோடி ரூபாய்க்கும் மேல் பிஸ்னெஸ் ஆகியிருப்பதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாடல்கள்: படத்திலிருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் முதலில் வெளியான நா ரெடிதான் பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விஜய் வாயில் சிகரெட்டுடன் அந்தப் பாடலில் நடனம் ஆடியிருந்தார். அதேபோல் பாடல் வரிகள் முழுக்க போதையும், வன்முறையும் நிறைந்திருந்தன. அதனையடுத்து Bad Ass என்ற இரண்டாவது சிங்கிள் வெளியானது.

அந்தப் பாடலை கேட்ட ரசிகர்கள் இது வேண்டுமென்றே ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ஹுக்கும் பாடல் வரிகளுக்கு பதிலடி கொடுப்பது போல் வரிகள் அமைக்கப்பட்டிருப்பதாக ஒரு கருத்தை முன்வைத்தனர். அதேபோல் பாடலில் பெரிதாக ஒன்றும் இல்லை என்றும் பேசினர். அதேசமயம் ட்ரெய்லருடன் அந்தப் பாடலை பார்ப்பதற்கு கூஸ்பம்ப்ஸாக இருந்தது.

Leo Third Single Anbenum Song Is Releasing Tommorrow

மூன்றாவது சிங்கிள்: இந்நிலையில் படத்தில் இடம்பெற்றிருக்கும் அன்பெனும் என்ற பாடல் நாளை வெளியாகவிருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விஜய், த்ரிஷா போஸ்டருடன் வெளியிட்டிருக்கிறது. படத்தில் மொத்தமே இரண்டு பாடல்கள்தான் என்று முன்னர் கூறப்பட்டுவந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் ரொமான்ஸ் மெலடியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

More from Filmibeat

Read more about: leo leo third single லியோ
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X