Leo Third Single: ரசிகர்களை எமோஷனலாக்கிய விஜய், த்ரிஷா... வெளியானது லியோ மூன்றாவது சிங்கிள்
சென்னை: விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ட்ரெய்லர் கடந்த வாரம் வெளியானது.
அதனைத் தொடர்ந்து தற்போது லியோ மூன்றாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஃபேமிலி பாடலாக ரொம்பவே எமோஷனலாக உருவாகியுள்ள இது விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.
முதல் இரண்டு பாடல்களில் அதிரடி காட்டிய லியோ டீம், மூன்றவது சிங்கிளை மெலடியாக கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளியானது லியோ மூன்றாவது பாடல்
விஜய் நடித்துள்ள லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். வரும் 19ம் தேதி ரிலீஸாகவுள்ள லியோ படத்திற்கு, சிறப்புக் காட்சிகள் திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ள நிலையில், இன்னொரு சர்ப்ரைஸ்ஸாக லியோ மூன்றாவது பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது வெளியான லியோ மூன்றவது சிங்கிள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
முன்னதாக விஜய் பிறந்தநாளில் 'நான் ரெடி' என்ற முதல் பாடல் வெளியானது. இந்தப் பாடலில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சியும், சில வரிகளும் சர்ச்சையாகின. அதன்பிறகு நீண்ட இடைவேளைக்குப் பின்னர் லியோ செகண்ட் சிங்கிள் வெளியானது. Badass என்ற டைட்டிலில் வெளியான இந்தப் பாடல், விஜய்யின் மாஸ் சாங்காக உருவாகியிருந்தது. இந்த இரண்டு பாடல்களும் அனிருத்தின் இசையில் அதிரடி காட்டியிருந்தது.
இதனால், லியோ மூன்றாவது பாடலில் கொஞ்சம் அடக்கி வாசித்துள்ளார் அனிருத். ஃபேமிலி சாங் கான்செப்ட்டில் 'அன்பெனும்' என்ற டைட்டிலில் மெலடியாக உருவாகியுள்ளது இந்தப் பாடல். லோகேஷின் அசிஸ்டெண்ட் விஷ்ணு எடவன் இந்தப் பாடலை எழுதியுள்ளார், அனிருத்தும் லோதிகாவும் பாடியுள்ளனர். மனதை வருடும் மெலடியான இந்தப் பாடலில், விஜய், த்ரிஷா, மேத்யூ தாமஸ், கெளதம் மேனன், ப்ரியா ஆனந்த் ஆகியோர் நடித்திருப்பதும் உறுதியாகியுள்ளது.

ஃபேமிலி சாங் என்பதால் ரொம்பவே எமோஷனலான சீன்ஸ், விஜய், த்ரிஷா ஆகியோரின் க்யூட்டான லுக் என செம்ம கலர்ஃபுல்லாக வந்துள்ளது. லியோ முழுக்க முழுக்க ஆக்ஷன் ஜானர் படமாக இருந்தாலும், அதில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக சில எமோஷனல் சீன்ஸ் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்நிலையில், தற்போது வெளியான லியோ மூன்றாவது சிங்கிள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
லியோ மூன்றாவது சிங்கிளான அன்பெனும் பாடல், தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட 5 மொழிகளில் வெளியாகியுள்ளது. லியோவில் மொத்தம் 5 பாடல்கள் இருப்பதாக லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். அதன்படி இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன. இதுதவிர லியோ படத்தில் இன்னும் இரண்டு பாடல்கள் உள்ளதால், அவைகளும் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அடுத்த வாரம் 19ம் தேதி லியோ ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











