Leo Bookings: காட் ஸ்பீட்.. Book My Showல் தீயாய் பறக்கும் லியோ டிக்கெட் விற்பனை.. விஜய் வேட்டை!
சென்னை: தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படம் இன்னும் 6 நாட்களில் வெளியாக உள்ள நிலையில், புக் மை ஷோவில் சற்றுமுன் டிக்கெட் புக்கிங் சில தியேட்டர்களில் தொடங்கியது.
டிக்கெட் புக்கிங் தொடங்கியதுமே டோட்டல் ரெட்டாக மாற்றி விஜய் ரசிகர்கள் அலப்பறையை கிளப்பி வருகின்றனர்.

இங்கிலாந்து உள்ளிட்ட உலக நாடுகளில் ஏற்கனவே டிக்கெட் முன் பதிவில் விஜய்யின் லியோ கெத்து காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் டிக்கெட் புக்கிங் ஆரம்பம்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், த்ரிஷா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், இயக்குநர்கள் கெளதம் மேனன், அனுராக் காஷ்யப், மிஷ்கின் மற்றும் பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், சாண்டி, மன்சூர் அலி கான் என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள லியோ திரைப்படத்திற்கான தமிழ்நாடு டிக்கெட் புக்கிங் நேற்று முதல் ஒரு சில திரையரங்குகளில் தொடங்கிய நிலையில், தற்போது அனைத்து இடங்களிலும் டிக்கெட் புக்கிங் பல திரையரங்குகளில் ஆரம்பித்துள்ளன.

புக் மை ஷோவில் தீ தெறிக்குது: புக் மை ஷோ செயலிலும் சில குறிப்பிட்ட திரையரங்குகள் லியோ படத்திற்கான டிக்கெட் விற்பனை தொடங்கி உள்ளன. ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே லட்சக் கணக்கில் டிக்கெட் விற்பனை நடைபெற்று வருவதாக ரசிகர்கள் ட்வீட்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். புக் மை ஷோவில் ஓபனாகி உள்ள தியேட்டர்கள் எல்லாமே சில நிமிடங்களிலேயே சிகப்பு நிறத்தை காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

வசூல் வேட்டைக்கு விஜய் ரெடி: இதுவரை இல்லாத அளவுக்கு லியோ படத்தின் மூலம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடிகர் விஜய் நடத்தப் போவது உறுதியாகி உள்ளது. 300 கோடி வசூல் வரும் போதே 200 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், 1000 கோடி வசூல் வேட்டை ஆடினால் 500 கோடியாக சம்பளத்தை உயர்த்தி விடுவாரா? என கேள்விகளை எழுப்பி ரஜினி ரசிகர்கள் மற்றும அஜித் ரசிகர்கள் இன்னொரு புறம் ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











