Leo: கடைசி வரைக்கும் பஞ்சாயத்தை கூட்டுறாங்களே.. சென்னை தியேட்டர்களில் நீடிக்கும் தாமதம்.. ஏன்?

சென்னை: உலகளவில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்திற்கான டிக்கெட் புக்கிங் தொடங்கிய நிலையில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா என அனைத்து ஏரியாக்களிலும் டிக்கெட் புக்கிங் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆனால், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் மட்டும் லியோ படத்துக்கு எதிராக ஏகப்பட்ட பிரச்சனைகள் கடைசி வரை தொடர்ந்து வருவது சென்னையில் உள்ள விஜய் ரசிகர்களை செம கடுப்பில் ஆழ்த்தி உள்ளது.

Leo ticket bookings still not started in Chennai makes fans upset

தியேட்டர் நிர்வாகத்துக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இடையே உள்ள பிரச்சனை தான் இந்த தாமதத்திற்கு காரணம் எனக் கூறப்பட்டாலும், மற்ற இடங்களில் எல்லாம் இல்லாத பிரச்சனை சென்னையில் மட்டும் ஏன் எழுந்துள்ளது என்கிற கேள்வியை ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர்.

4 நாள் தான் இருக்கு: லியோ திரைப்படம் வெளியாகும் போது அக்டோபர் மாதமே அப்டேட் மாதமாக இருக்கும் என்றும் விஜய் மைக்கை பிடித்து இந்த முறை பேசும் பேச்சு ஹேட்டர்களுக்கு இடியாக இறங்கும் என தொடர்ந்து விஜய் ரசிகர்கள் கண்ட பல கனவுகள் சுக்குநூறாக உடைந்து இன்னும் 4 நாட்களில் லியோ படம் இதுவரை இல்லாத அமைதியுடன் வெளியாக போகிறது.

சென்னையில் நீடிக்கும் சிக்கல்: தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் எல்லாம் லியோ படத்திற்கான டிக்கெட் புக்கிங் தொடங்கப்பட்டுள்ள நிலையில், கோலிவுட்டின் கோட்டையான சென்னையில் இன்னமும் பல திரையரங்குகளில் டிக்கெட் புக்கிங் ஆரம்பிக்காமல் அப்படியே பஞ்சாயத்து தொடர்ந்து வருவது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ரெட் ஜெயண்ட் தான் காரணமா?: ரெட் ஜெயண்ட் நிறுவனம் பொங்கலுக்கு வெளியாக உள்ள ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்று விட்டோம் என்றும் தீபாவளிக்கு வரவுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உரிமையை பெற்று விட்டோம் என தொடர்ந்து ஒரு பக்கம் அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், சென்னையில் இன்னமும் லியோ டிக்கெட் புக்கிங் தொடங்காமல் இருக்க ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் லியோ படத்தின் ரிலீஸ் உரிமையை கொடுக்காதது காரணமா? என்கிற கேள்வியை விஜய் ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

Leo ticket bookings still not started in Chennai makes fans upset

கடைசி நேரம் வரை: ஆனால், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் ஷேர் பங்கீடு பிரச்சனை தான் இதற்கு காரணம் என்றும் கடைசி வரை நடிகர் விஜய் படம் என்பதால் பிரச்சனைகள் தொடர்ந்து வருவதாகவும், ஆனால், கடைசியில் எல்லாம் சரியாகி வசூல் வேட்டையை லியோ நடத்தும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X