Leo TN Box Office: தமிழ்நாட்டில் அதிவேகமாக 100 கோடி வசூல்!! லியோவின் அடுத்த சாதனை?
சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியானது.
பான் இந்தியா படமாக ரிலீஸான லியோ, மூன்று நாட்களில் 300 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாம்.

இந்நிலையில் தமிழ்நாட்டிலும் லியோவின் கலெக்ஷன் புதிய சாதனை படைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அதன்படி, கோலிவுட்டில் முதல் 4 நாட்களில் 100 கோடி வசூலித்த படம் லியோ தான் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
லியோவின் வசூல் சாதனை
விஜய் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லியோ திரைப்படம், கடந்த 19ம் தேதி வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைத்திருந்த இந்தப் படம், LCUன் கீழ் உருவாகியுள்ளது. விஜய் ப்ளஸ் லோகேஷின் ஆக்ஷன் ட்ரீட்டாக வெளியாகியுள்ள லியோவுக்கு முதல் நாளில் தரமான ஓபனிங் கிடைத்தது. இதனால் முதல் நாளில் உலகம் முழுவதும் 148 கோடி ரூபாய் வரை வசூலித்தது.
இதுவரை தமிழில் வெளியான எந்தப் படங்களும் முதல் நாளில் 148 கோடி வரை வசூலித்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர், முதல் நாளில் 100 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்தது. அதேபோல், சமீபத்தில் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த ஷாருக்கானின் ஜவான், முதல் நாளில் 128 கோடி வரை கலெக்ஷன் செய்திருந்தது.
ஜெயிலர், ஜவான் படங்களின் சாதனையை அசால்ட்டாக பிரேக் செய்த லியோ, பாக்ஸ் ஆபிஸில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. முதல் மூன்று நாட்களில் 300 கோடி ரூபாய் வசூலை கடந்து வெற்றி நடைபோடுகிறது. முதல் நாளில் லியோவுக்கு நல்ல ஓபனிங் இருந்தாலும், அடுத்தடுத்து நெகட்டிவாகவும் விமர்சனங்கள் வெளியாகின. இதனால் இனி லியோவின் வசூல் பெரியளவில் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மூன்றாவது நாளில் தமிழ்நாட்டில் அதிவேகமாக 100 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற பெருமையை லியோ தட்டிச் சென்றுள்ளது. தமிழ்நாட்டில் முதல் நாளில் 35 கோடி வரை வசூலித்த லியோ, இரண்டாவது நாளிலும் 35 முதல் 40 கோடி வரை கலெக்ஷன் செய்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் முதல் இரண்டு நாட்களில் 70 கோடி வசூலை கடந்தது லியோ.
இதன் தொடர்ச்சியாக மூன்றாவது நாளிலும் 30 கோடி வரை கலெக்ஷன் செய்துள்ளது. இந்நிலையில் 4வது நாளான இன்று தமிழ்நாட்டில் 100 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துவிடும் என்றும், இதுதான் தமிழ்நாட்டில் அதிவேக 100 கோடி ரூபாய் சாதனை எனவும் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











