2023ல் பாலிவுட் படங்களை முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் பதற வைத்த தளபதி விஜய்.. டாப் 5 லிஸ்ட் இதோ!

சென்னை: இந்திய திரையுலகில் 2023ம் ஆண்டு அதிக பட்ஜட்டில் நிறைய படங்கள் வெளியானது. அதில் குறிப்பிடத்தக்கது, ஜவான், பதான், லியோ, பொன்னியின் செல்வன் பாகம் 2, ஆதிபுருஷ், வாரிசு போன்ற படங்கள். 2023-இல் வெளியான படங்களில் முதல் நாள் வசூல் சாதனை படைத்தன.

இந்த படங்களில் முதல் ஐந்து இடங்களை பிடித்த படங்களின் பட்டியல் குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..

Leo to Animal: 2023 Top 5 Highest Day 1 Box Office Collection Indian Movies List is here

5. பதான்: முதல் நாள் அதிக வசூல் செய்த படங்களில் ஐந்தாவது இடத்தை பிடித்த படம், யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த பதான் படம் தான். 225 கோடி பட்ஜட்டில் தயாரான இப்படத்தின் முதல் நாள் வசூல் 105 கோடி ஆகும். 1000 கோடி வசூலை ஒட்டுமொத்தமாக ஈட்டியது.

4. அனிமல்: இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ள படம், டி-சீரிஸ் பிலிம்ஸ், பத்ரகாளி பிக்சர்ஸ் சினி 1 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் சிங், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான அனிமல் பிடித்துள்ளது. இப்படத்தின் பட்ஜட் 100 கோடி, வெளியான முதல் நாளிலேயே படத்தின் படத்தின் பட்ஜட்டை தாண்டி 115.60 கோடியை இந்த படம் வசூலித்துள்ளது.

3. ஜவான்: ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மேன்ட் தயாரிப்பில் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ராக் ஸ்டார் அனிரூத்தின் இசையில் நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விஜய்சேதுபதி போன்ற பிரபலங்கள் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படம் ஜவான். முதல் நாள் வசூல் சாதனை பட்டியலில் ஜவான் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. 300 கோடி பட்ஜட்டில் உருவான இப்படத்தின் முதல் நாள் வசூல் 126 கோடி. இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே இதுவரை அதிக வசூல் ஈட்டிய படமாக 1100 கோடி வசூலை ஈட்டியுள்ளது.

2. ஆதிபுருஷ்: பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் படத்தை டி-சீரிஸ் தயாரித்தது. பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பான் இந்தியன் ஸ்டாரான பிரபாஸ் நடிப்பில் வெளியான படம் ஆதிபுருஷ். இராமாயனத்தை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தின் பட்ஜட் ஏறத்தாழ 600 கோடி என கூறப்பட்டது. இப்படத்தின் முதல் நாள் வசூல் 137 கோடி. ஆனால், அடுத்த நாளில் இருந்து படம் பெரிதாக ஓடாமல் பட்ஜெட்டை கூட வசூல் செய்யாமல் தோல்வியை தழுவியது.

1. லியோ: இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ள படம், லலித் குமார் தயாரிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், திரிஷா, கௌதம் மெனன், சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின் ஆகியோர் நடிப்பில் வெளியான லியோ படம் தான். ஏறத்தாழ 300 கோடியில் உருவான இப்படத்தின் முதல் நாள் வசூல் 146.15 கோடி. இந்த பட்டியலில் உள்ள அனைத்து பாலிவுட் படங்களையும் பின்னுக்குத் தள்ளி லியோ முதலிடத்தை பிடித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 620 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் முதல் நாளில் 98 கோடி வசூல் ஈட்டியதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X