Leo Trailer: “லியோ ட்ரெய்லர்... தாவம்பட்டை எல்லாம் தரைல தான் இருக்கும்..” மஜா அப்டேட்டா இருக்கே!!

சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி ரிலீஸாகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்தின் ட்ரெய்லர் நாளை (அக்.5) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சென்னையில் உள்ள முக்கியமான இடங்களில் லியோ ட்ரெய்லரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் லியோ ட்ரெய்லர் குறித்து படத்தின் வசனகர்த்தா தீரஜ் வைத்தி கொடுத்துள்ள அப்டேட் வைரலாகி வருகிறது.

 Leo trailer: Deeraj Vaidy Updates Vijays Leo Trailer Will Be Mass

லியோ ட்ரெய்லர் மஜா அப்டேட்: தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ, வரும் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 7 ஸ்க்ரீன்ஸ் ஸ்டூடியோஸ் லலித் குமார் தயாரித்துள்ள இந்தப் படம் மல்டி ஸ்டார்ஸ் காம்போவில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. பான் இந்தியா படமான லியோ தமிழ் உட்பட மற்ற மொழிகளிலும் வெளியாக உள்ளதால், பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடி ரூபாய் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, லியோ ஆடியோ லான்ச் திடீரென கேன்சல் செய்யப்பட்டது, இதனையடுத்து உடனடியாக லியோ செகண்ட் சிங்கிளை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தது. மேலும் விரைவில் லியோ ட்ரெய்லர் வெளியாகும் என சொல்லப்பட்டது. அதன்படி, விஜய்யின் லியோ ட்ரெய்லர் நாளை (அக்.5) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆடியோ லான்ச் கேன்சலானதால் படத்தின் ட்ரெய்லரை ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக கொடுக்க முடிவெடுத்துள்ளது.

அதன்படி, லியோ ட்ரெய்லர் சென்னையின் மிக முக்கியமான பகுதிகளில் ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மண்டமாக திரையிடப்படவுள்ளது. மேலும், சன் டிவியின் யூடியூப் தளத்திலும் லியோ ட்ரெய்லர் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் விஜய் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். அவர்களை மஜா மோடில் மாற்றியுள்ளார் லியோ படத்தின் வசனகர்த்தா தீரஜ் வைத்தி. சித்தார்த்தின் ஜில் ஜங் ஜக் படத்தை இயக்கி பிரபலமானவர் தீரஜ் வைத்தி.

 Leo trailer: Deeraj Vaidy Updates Vijays Leo Trailer Will Be Mass

லியோ படத்திற்கு வசனம் எழுதியுள்ள தீரஜ் வைத்தி, தனது டிவிட்டரில் அப்டேட் கொடுத்துள்ளார். "Just met Lokesh and saw the trailer! Trailer பாத்ததும் உங்க தாவம்பட்டை எல்லாம் தரைல தான் இருக்கும்" என லீட் கொடுத்துள்ளார். அதாவது லியோ ட்ரெய்லரை இப்போது தான் பார்த்தேன் என ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இதனால், விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஹைப் கூடியுள்ளது.

நாளை வெளியாகவுள்ள லியோ ட்ரெய்லர் ரசிகர்களுக்கு மஜாவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லியோ ட்ரெய்லரை தொடர்ந்து அடுத்தடுத்து ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் நடைபெறலாம் எனவும் படக்குழு தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. லியோ ட்ரெய்லர் அப்டேட்டாக வெளியான போஸ்டரை போல, ரியல் ட்ரெய்லரும் மிரட்டும் என எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X