Leo Trailer - 24 மணி நேரம்கூட ஆகல.. ஜெயிலர் சாதனையை அடித்து நொறுக்கிய லியோ.. விஜய்க்கு நம்பர் 1உறுதி?

சென்னை: Leo Trailer (லியோ ட்ரெய்லர்) லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்துக்குள் ஜெயிலர் படம் செய்த சாதனையை அடித்து நொறுக்கியிருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் லியோ படத்தில் நடித்திருக்கிறார். கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் ரஜினிக்கு போட்டியாக விஜய்யை கொண்டு வந்து அவரது ரசிகர்கள் நிறுத்தியிருப்பதால் லியோ படத்தின் ரிசல்ட்டும் பாக்ஸ் ஆபிஸ் நம்பரும் ரொம்பவே முக்கியமாக அவர்களுக்கு படுகிறது.

படம் ரிலீஸ்: லியோபடம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதற்கிடையே ஆடியோ லான்ஸ் நடைபெறுவதாக இருந்தது ஆனால் அது சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டது. நிலைமை இப்படி இருக்க படத்திலிருந்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வந்துகொண்டிருந்தன. நேற்று உச்சக்கட்டமாக லியோ படத்தின் ட்ரெய்லர் சன் டிவி யூட்யூப் சேனலில் வெளியானது.

எப்படி இருக்கு ட்ரெய்லர்: ட்ரெய்லருக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். காஷ்மீரில் சீரியல் கில்லர் கதையை விஜய் சொல்லும்படி தொடங்கும் ட்ரெய்லர் கடைசியில் லியோ எண்ட்ரியுடன் முடிவடைகிறது. இதனைப் பார்த ரசிகர்கள் படத்தில் விஜய்க்கு டபுள் கெட்டப்பா இல்லை டபுள் ஆக்‌ஷனா என்ற கேள்வியை எழுப்பிவருகின்றனர். மேலும் படத்தில் கண்டிப்பாக ஏதோ ஒரு ட்விஸ்ட் இருப்பதும் உறுதியாகியிருக்கிறது.

Leo Trailer Got 30 Million Views in Youtube and Beats Jailer Trailer Record With in 24 Hours

விமர்சனம்: இப்படி ஒருபக்கம் விஜய் ரசிகர்கள் லியோ ட்ரெய்லரை கொண்டாடிவந்தாலும் மறுபக்கம் பிரச்னையும் கிளம்பியிருக்கிறது. அதாவது ட்ரெய்லரில் ஒரு கெட்ட வார்த்தையை விஜய் பேசுகிறார். அது பெண்களை இழிவுப்படுத்தும் சொல். இதனை பார்த்த பலரும் முன்னணி ஹீரோவாக இருந்துகொண்டு விஜய் இவ்வாறு பேசலாமா என கேட்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர்.

மேலும் அநியாயத்துக்கு வன்முறை காட்சிகள் இருக்கின்றன. லோகேஷ் கனகராஜ் எல்லாம் தகுதியே இல்லாத இயக்குநர் என்று காட்டமாக ஒருசிலர் விமர்சிக்கவும் செய்தனர். ஏற்கனவே நா ரெடிதான் பாடல் சர்ச்சையை சந்தித்த சூழலில் தற்போது ட்ரெய்லரும் சந்தித்திருக்கிறது. இந்த சூழலில் லியோ ட்ரெய்லர் தரமான சாதனையை படைத்துள்ளது.

ஜெயிலர் சாதனை க்ளோஸ்: அதாவது லியோ ட்ரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்துக்குள் 30 மில்லியன் பார்வைகளை யூட்யூபில் கடந்திருக்கிறது. இது ஜெயிலர் படத்தின் ட்ரெய்லர் பெற்ற பார்வைகளைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இப்போதாவது விஜய்யின் மாஸை உணர்ந்துகொள்ளுங்கள். விஜய்தான் எப்போதும் தமிழ் சினிமாவில் நம்பர் 1 என்பது இதன் மூலம் உறுதியாகியிருப்பதாக கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X