Leo Trailer - இந்திய சினிமாவிலேயே லியோ ட்ரெய்லர்தான் பெஸ்ட்.. ஹைப் ஏத்தும் இயக்குநர்

சென்னை: Leo Trailer (லியோ ட்ரெய்லர்) இந்திய சினிமாவிலேயே லியோ ட்ரெய்லர்தான் பெஸ்ட் என இயக்குநரும் வசனகர்த்தாவுமான ரத்னகுமார் தெரிவித்திருக்கிறார்.

கோலிவுட்டில் இப்போது மோஸ்ட் வாண்டட் படமாக இருக்கும் படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின், மாத்யூ தாமஸ், ப்ரியா ஆனந்த், அனுராக் காஷ்யப், சாண்டி மாஸ்டர் என பெரிய நட்சத்திர பட்டாளமே களமிறங்கியிருக்கிறது. படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது.

Leo Trailer is the best in indian cinema says rathnakumar

யு/ஏ: படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து சென்சாருக்கு சென்று யு/ஏ சர்ட்டிஃபிகேட்டை படம் பெற்றிருக்கிறது. படத்தில் ஏகப்பட்ட கெட்டவார்த்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் வன்முறை காட்சிகளும் பல மடங்கு அதிகம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் லோகேஷ் கனகராஜ் அந்த ஜானருக்குள் படம் எடுப்பவர் என்று உறுதியாகியிருக்கிறது.

ஆடியோ லான்ச் ரத்து: இதற்கிடையே லியோ படத்தின் ஆடியோ லான்ச் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அன்றைய தினம் நடக்கவிருந்த ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டது. அதற்கு காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் சொல்லப்பட்டது. இதனால் ரசிகர்கள் ரொம்பவே அப்செட்டாகினர். இருந்தாலும் படத்திலிருந்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது.

தொடர் அப்டேட்டுகள்: அதன்படி லியோ படத்திலிருந்து வரிசையாக போஸ்டர்கள் வெளியாகின. அதனையடுத்து செகண்ட் சிங்கிள் வெளியானது. அந்தப் பாடல் கலவையான விமர்சனத்தையே பெற்றது. அதேபோல் ஜெயிலர் ஹுக்கும் பாடலுக்கு போட்டியாக இந்தப் பாடல் களமிறக்கப்பட்டிருப்பதாகவும் ரசிகர்களில் ஒருதரப்பினர் ஓபனாகவே கூறியது குறிப்பிடத்தக்கது.

லியோ ட்ரெய்லர்: செகண்ட் சிங்கிள் அப்டேட்டுக்கு பிறகு லியோ படத்தின் ட்ரெய்லர் அப்டேட் வெளியானது. அதன்படி இன்று ட்ரெய்லர் வெளியாகவிருக்கிறது. இதற்காக ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ட்விட்டரில் ஒருவர் இந்தியாவிலேயே பெஸ்ட் ட்ரெய்லர் என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ரத்னகுமார், லியோ என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் ரசிகர்களுக்கு உச்சக்கட்ட ஹைப் ஏறியுள்ளது.

More from Filmibeat

Read more about: leo leo trailer லியோ
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X