Leo Trailer: லியோ ஆடியோ லான்ச் கேன்சலால் பரபரப்பு... ட்ரெய்லரை வெளியிட படக்குழு அதிரடி முடிவு!
சென்னை: விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ, அடுத்த மாதம் வெளியாகிறது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் 30ம் தேதி நடைபெறும் என சொல்லப்பட்டது.
ஆனால், லியோ ஆடியோ லான்ச் கேன்சல் செய்யப்படுவதாக தயாரிப்பு தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சியான விஜய் ரசிகர்களை கூல் செய்வதற்காக, அதிரடியாக லியோ ட்ரெய்லரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

விரைவில் லியோ ட்ரெய்லர்: விஜய்யின் லியோ திரைப்படம் அடுத்த மாதம் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். விஜய்யின் கேரியரில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள லியோ, கோலிவுட்டின் முதல் ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த வாரம் முதல் லியோ படத்தில் இருந்து அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் இந்த வாரம், லியோ இசை வெளியீட்டு விழா நடைபெறவிருந்தது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் இந்த வாரம் 30ம் தேதி லியோ இசை வெளியீட்டு விழா நடைபெறும் என சொல்லப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளும் வேகமாக நடைபெற்று வந்தன. ஆனால், திடீரென லியோ இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பு தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியானது.
இதனால், விஜய் ரசிகர்களும் அவரது மக்கள் இயக்க நிர்வாகிகளும் கடும் அதிர்ச்சியடைந்தனர். அதிகளவில் என்ட்ரி பாஸ் கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடிகள் என்பதற்காகவும், இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக படக்குழு அறிவித்தது. ஆனால், அரசியல் அழுத்தம் காரணமாக தான் படக்குழு இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இதனையடுத்து விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதே நேரம் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இசை வெளியீட்டு விழா நடைபெறாமல் போனாலும், லியோ படத்துக்கு தங்களது ஆதரவு கண்டிப்பாக உண்டு என ஆக்ரோஷமாக பதிவிட்டு வருகின்றனர். ரசிகர்களின் ஆதங்கத்தை கட்டுப்படுத்த விஜய் ஒரு வீடியோ வெளியிடலாம் என சினிமா விமர்சகர்களும் கூறி வருகின்றனர்.
இதனால், ரசிகர்களை கூல் செய்வதற்காக உடனடியாக லியோ ட்ரெய்லரை வெளியிடலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாம். ஏற்கனவே இசை வெளியீட்டு விழா நடைபெறவிருந்த தேதியில், லியோ டீசர் வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அடுத்த வாரமே, அதாவது அக்டோபர் முதல் வாரத்தில் லியோ ட்ரெய்லரையும் ரிலீஸ் செய்துவிட படக்குழு ரெடியாகிவிட்டதாம். இதனையடுத்து லியோ ட்ரெய்லர் என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











