Leo Trailer: லியோ ட்ரெய்லருடன் தளபதி 68 பூஜை... சிக்னல் கொடுத்த விஜய்... ஒரே நாளில் டபுள் ட்ரீட்?
சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை லலித் குமார் தயாரித்துள்ளார்.

இன்று நடைபெறவிருந்த லியோ இசை வெளியீட்டு விழாவை படக்குழு கேன்சல் செய்துவிட்டது.
இதனால், லியோ செகண்ட் சிங்கிளை வெளியிட்ட படக்குழு, அடுத்து ட்ரெய்லரையும் அதிரடியாக ரிலீஸ் செய்ய முடிவு செய்துவிட்டதாம்.
லியோ ட்ரெய்லருடன் தளபதி 68 பூஜை
இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக விஜய்யின் வாரிசு வெளியானது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தில் நடித்தார் விஜய். குறுகிய காலத்தில் உருவான இந்தப் படம் தற்போது ரிலீஸுக்கும் ரெடியாகிவிட்டது. பிரம்மாண்டமான பட்ஜெட், மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் படமாக இருந்தாலும், 120 நாட்களில் லியோ படப்பிடிப்பை முடித்துள்ளார் லோகேஷ்.
தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக இருக்கும் லோகேஷ், அவ்வப்போது லியோ அப்டேட்டை வெளியிட்டு வருகிறார். இதனிடையே இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் லியோ இசை வெளியீட்டு விழா நடைபெறும் என சொல்லப்பட்டது. ஆனால், ரசிகர்கள் அதிகளவில் கூடினால் பாதுகாப்பு ஏற்பாட்டில் குளறுபடிகள் ஆகிவிடும் என ஆடியோ லான்ச் நிகழ்ச்சி கேன்சல் செய்யப்படுவதாக தயாரிப்பு தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டது.

லியோ ஆடியோ லான்ச் கேன்சலாக அரசியல் அழுத்தம் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் அதெல்லாம் உண்மையில்லை என அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிடுவதில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு. மேலும், இரு தினங்களுக்கு முன் லியோ செகண்ட் சிங்கிளை ரிலீஸ் செய்தது. இதன் தொடர்ச்சியாக லியோ டீசர் வெளியாகும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், அவர்களுக்கே சர்ப்ரைஸ் கொடுக்கும்விதமாக, லியோ ட்ரெய்லரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதன்படி, லியோ ட்ரெய்லர் அக்டோபர் 2ம் தேதி ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. லியோ ட்ரெய்லரை எடிட் செய்துவிட்ட லோகேஷ், அதனை விஜய்யிடம் போட்டுக் காட்டியதாகவும் தெரிகிறது. ட்ரெய்லர் பார்த்து மெர்சலான விஜய், அக்டோபர் 2ம் தேதியே ரிலீஸ் செய்துவிடலாம் எனக் கூறிவிட்டாராம்.
அதே தேதியில் தளபதி 68 படத்தின் பூஜை நிகழ்ச்சிக்கும் ஓக்கே சொல்லிவிட்டாராம் விஜய். ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. அக்டோபர் 2ம் தேதி பூஜை முடிந்ததும், 4ம் தேதியில் இருந்து படப்பிடிப்பில் கலந்துகொள்ள விஜய் ரெடியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரே நாளில் லியோ ட்ரெய்லர், தளபதி 68 பூஜை என விஜய் ரசிகர்களுக்கு தரமான ட்ரீட் காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











