Leo Trailer: விஜய்யின் லியோ ட்ரெய்லர்... எதிர்பார்த்து ஏமாந்துபோன ரசிகர்கள்... புதிய ரிலீஸ் தேதி..?

சென்னை: விஜய் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி வெளியாகிறது.

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள லியோ, இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

லியோ ஆடியோ லான்ச் கேன்சல் ஆனதால், இன்று படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என சொல்லப்பட்டது.

ஆனால், ஆடியோ லான்ச் மாதிரியே லியோ ட்ரெய்லர் ரிலீஸும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.

 Leo trailer: Vijays Leo trailer is expected to be released on October 5th

லியோ ட்ரெய்லருக்கு வந்த சிக்கல்: விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படம் லியோ. லலித்குமார் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள லியோ, வரும் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. பான் இந்தியா படமான லியோவுக்கு, மற்ற மொழி ரசிகர்களிடமும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதனால், கோலிவுட்டில் லியோ தான் முதன்முறையாக ஆயிரம் கோடி வசூலிக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், லியோ ஆடியோ லான்ச் திடீரென கேன்சல் செய்யப்பட்டது, படத்தின் ப்ரொமோஷனுக்கு பெரிய அடியாக பார்க்கப்படுகிறது. இதனால், லியோ ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாம். ஆனால் அதுபற்றியும் இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. அதேபோல், தமிழ்நாட்டில் லியோ ஸ்பெஷல் ஷோ திரையிடவும் இன்னும் அனுமதி கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. ஆனால், மற்ற மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கு லியோ வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

லியோ ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில், அடுத்தடுத்து சிக்கல்களை சந்தித்து வருகிறது படக்குழு. இதனிடையே ஆடியோ லான்ச் கேன்சல் ஆனதால், லியோ செகண்ட் சிங்கிளை வெளியிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்தது படக்குழு. அதன் தொடர்ச்சியாக லியோ ட்ரெய்லர் வெளியாகும் என சொல்லப்பட்டது. அதன்படி அக்டோபர் 2ம் தேதி லியோ ட்ரெய்லர் ரிலீஸ் என சமூக வலைத்தளங்களில் வைரலானது.

 Leo trailer: Vijays Leo trailer is expected to be released on October 5th

ஆனால், எதிர்பார்த்தபடி லியோ ட்ரெய்லர் இன்று வெளியாக வாய்ப்பில்லை என்றே சொல்லப்படுகிறது. மேலும், வரும் 5ம் தேதி லியோ ட்ரெய்லரை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம். அப்படி இல்லையென்றால் அக்டோபர் 8ம் தேதி லியோ ட்ரெய்லர் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதனால் மீண்டும் ஒருமுறை விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஏற்கனவே லியோ இசை வெளியிட்டு விழா கேன்சலான நிலையில், இப்போது ட்ரெய்லர் ரிலீஸ் ஆகாமல் போனதும் ரசிகர்களை சோகமாக்கியுள்ளது.

அதேநேரம் இன்று தளபதி 68 படத்தின் பூஜை சென்னையில் நடந்துள்ளது. ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. சென்னை பிரசாந்த் லேபில் தளபதி 68 பூஜை நடந்ததாகவும், இதுபற்றிய அப்டேட் விரைவில் வீடியோவாக வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், லியோ ட்ரெய்லர் இன்று வெளியாகாமல் போனதால், விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் அப்டேட் கேட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X