Leo Trailer - அய்யய்யோ உச்சக்கட்ட வெறியில் இருக்காங்களே.. லியோ ட்ரெய்லருக்காக திரண்ட கூட்டம்
சென்னை: Leo Trailer (லியோ ட்ரெய்லர்) லியோ படத்தின் ட்ரெய்லர் மாலை 6.30 மணிக்கு வெளியாகவிருக்கும் சூழலில் அதனை பார்ப்பதற்கு ரோகிணி தியேட்டரில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
பீஸ்ட், வாரிசு ஆகிய படங்களின் தோல்விக்கு பிறகு விஜய் லியோ படத்தில் நடித்திருக்கிறார். விக்ரம் என்ற மெகா ப்ளாக் பஸ்டர் படத்தை கொடுத்துவிட்டு அதே உற்சாகத்தோடு லியோவை இயக்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ஏற்கனவே விஜய்யும், லோகேஷ் கனகராஜும் இணைந்து கொடுத்த மாஸ்டர் படம் மெகா ஹிட்டாகி நூறு கோடி ரூபாயை வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உச்சக்கட்ட எதிர்பார்ப்பு: எனவே லியோ படம் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இருக்கிறது. இந்தப் படத்தில் விஜய் லியோதாஸ் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருப்பதாக தெரிகிறது. மேலும் அவருக்கு இதில் இரண்டு கெட்டப்புகள் என்றும் ஒரு கேங்ஸ்டர் குடும்ப கதைதான் என்றும் சொல்லப்படுகிறது. இருந்தாலும் ட்ரெய்லர் வரும்வரை எதையும் உறுதியாக சொல்ல முடியாது என்பதால் பொறுமை அவசியம்.

இன்று ட்ரெய்லர்: இந்த சூழலில் படத்திலிருந்து போஸ்டர்கள் வெளியான பிறகு இரண்டாவது சிங்கிள் வெளியானது. அதனையடுத்து ட்ரெய்லர் குறித்த அப்டேட் வெளியிடப்பட்டது. அதன்படி அக்டோபர் 5ஆம் தேதி (இன்று) ட்ரெய்லர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த ட்ரெய்லர் சன் டிவி யூட்யூப் சேனலில் ரிலீஸாகிறது. இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் ட்ரெய்லரை காண ரசிகர்கள் காலையிலிருந்து ஆவலோடு காத்திருக்கின்றனர்.
ரோகிணியில் கூட்டம்: பெரிய ஹீரோவின் ட்ரெய்லர் வெளியானால் ரோகிணி தியேட்டருக்கு வெளியே திரை அமைத்து அந்த ட்ரெய்லரை ரசிகர்களுக்கு திரையிடுவது வழக்கமான ஒன்று. அதற்கான ஏற்பாடுகளை படக்குழு செய்தது. ஆனால் கோயம்பேடு காவல் துறை காவல் ஆணையரை அணுகும்படி சொல்லிவிட்டதாக நேற்று ஒரு தகவல் பரவியது. இதனால் ட்ரெய்லர் ரோகிணி தியேட்டர் வெளியே திரையிடப்படுவதில் சிக்கல் வந்துவிடுமோ என ரசிகர்கள் அஞ்சினர்.
அண்ணன் வரார் வழிய விடு: ஆனால் அப்படி எந்த சிக்கலும் எழவில்லை. எனவே லியோ படத்தின் ட்ரெய்லரை பார்ப்பதற்கு இப்போதிருந்தே ரோகிணி தியேட்டருக்கு வெளியே ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் கூடிவிட்டனர். ட்ரெய்லர் வெளியாக இன்னும் ஒரு மணி நேரம் இருப்பதால் கண்டிப்பாக போகப்போக கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதால் விஜய் ரசிகர்கள் சோகத்தின் உச்சிக்கு சென்றனர்.
அதனால் லியோ ட்ரெய்லர் வெளியாவதை ஒரு திருவிழா, தீபாவளி போல் கொண்டாடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளுடனும் தயார் நிலையில் இருக்கின்றனர். அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருந்தால் சரி..


Click it and Unblock the Notifications











