Trisha: அப்போ நீ மாணிக்கம் இல்லை பாட்ஷாவா.. லியோ த்ரிஷா போஸ்டர் ரிலீஸ்.. அவங்க ஷேர் பண்ணுவாங்களா?

சென்னை: Trisha - லியோ படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாக உள்ள நிலையில், அந்த படத்தில் ஹீரோ ஏதாவது நடித்துள்ள நடிகை திரிஷாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ வெளியிட்டுள்ளது.

நடிகர் விஜய்யுடன் கில்லி, திருப்பாச்சி, ஆதி மற்றும் குருவி உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த திரிஷா பல ஆண்டுகள் கழித்து மீண்டும் லியோ படத்தில் விஜய்யுடன் இணைந்துள்ளார்.

Leo Trisha poster out now netizen decode the poster and trolls the movie

ஆரம்பத்தில் ஹேப்பி: காஷ்மீரில் லியோ படத்தின் சூட்டிங்கிற்கு விஜயுடன் தனி விமானத்தில் சென்ற திரிஷா திடீரென திரும்பி வந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் மீண்டும் நடிகை திரிஷா, காஷ்மீர் சூட்டிங்கிற்கு சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தின.

ஆனால் லியோ படத்தின் ரிலீஸ் நெருங்க உள்ள நிலையில், நடிகை திரிஷா இதுவரை அந்தப் படத்தை ஏன் புரமோட் செய்யவில்லை என்கிற கேள்வியை விஜய் ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

திரிஷா போஸ்டர்: லியோ படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாக உள்ள நிலையில், கடந்த சில தினங்களாக வில்லன்களான சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்டோரின் போஸ்டர்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் தற்போது லியோ படத்திலிருந்து நடிகை திரிஷாவின் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

Leo Trisha poster out now netizen decode the poster and trolls the movie

ஆனால், வழக்கம்போல அந்த போஸ்டரையும் நடிகை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடவில்லை. முன்னதாக லியோ படத்தின் சென்சார் சான்றிதழை மட்டும் த்ரிஷா ரீபோஸ்ட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லியோ ட்ரோல்: கூடிய விரைவில் தனது போஸ்டரை த்ரிஷா சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்வாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, லியோ படத்தில் திரிஷாவின் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் அமைதியான குடும்பத் தலைவனாக த்ரிஷாவுடன் வாழ்ந்து வரும் லியோ திடீரென ஒரு கட்டத்தில் ஆக்ரோஷமாக எதிரிகளை வெட்டி சாய்ப்பதை பார்த்து திரிஷா கொடுக்கும் ஷாக் போஸ்டர் ஆகவே தற்போது வெளியாகியுள்ளது என டிகோட் செய்த ரசிகர்கள், அப்போ நீ மாணிக்கம் இல்லையா பாட்ஷா வா என திரிஷா கேட்பது போல ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X