Leo Update: இன்று முதல் 'தினமும்' லியோ அப்டேட்... விருது விழாவில் லோகேஷ் கொடுத்த சர்ப்ரைஸ்!
துபாய்: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம், அக்டோபர் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
லியோ வெளியாக இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்களுக்கு துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

இன்று முதல் லியோ அப்டேட்: விஜய்யின் லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து லியோவில் இணைந்துள்ள இக்கூட்டணி, வெறித்தனமாக மாஸ் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், கெளதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
அதேபோல், லியோ திரைப்படம் லோகேஷின் LC யூனிவர்ஸில் உருவாகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், விஜய்யின் லியோ படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லியோ ஷூட்டிங் தொடங்கும் முன்னர் டைட்டில் டீசரை வெளியிட்ட லோகேஷ், அதன் பின்னர் விஜய் பிறந்தநாளில் ஃபர்ஸ்ட் சிங்கிளை ரிலீஸ் செய்தார். அதனைத் தொடர்ந்து சஞ்சய் தத், அர்ஜுன் ஆகியோரின் கேரக்டர் க்ளிம்ப்ஸ் வெளியானது.
அதேநேரம் லியோ வெளியாக இன்னும் ஒரு மாதமே உள்ளதால், அடுத்தடுத்து படத்தின் அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். லியோ செகண்ட் சிங்கிள், ஆடியோ லாஞ்ச் தேதி ஆகியவை குறித்த அப்டேட் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால், இதுவரை அதுகுறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை. இந்நிலையில் துபாயில் நடைபெற்ற 2023ம் ஆண்டுக்கான சைமா விருது விழாவில் லோகேஷ் கலந்துகொண்டார்.

அப்போது அவரிடம் லியோ படத்தின் அப்டேட் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், படம் வெளியாவதற்கு 30 நாட்கள் முன்பிலிருந்து லியோ அப்டேட் கொடுக்கலாம் என பிளான் செய்திருந்தோம். அதன்படி, இன்று முதல் லியோ அப்டேட் வெளியாகிக் கொண்டே இருக்கும் என அதிரடியாக அறிவித்துள்ளார். இதனால் உற்சாகமான விஜய் ரசிகர்கள், லியோ அப்டேட், லோகேஷ் கனகராஜ் ஹேஷ் டேக்-களை டிவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
லோகேஷ் கொடுத்த தகவலின் படி, லியோ செகண்ட் சிங்கிளுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு மேலும் சில அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், லியோ இசை வெளியீட்டு விழா, ட்ரெய்லர் ரிலீஸ் குறித்தும் படக்குழு தரப்பில் இருந்து மாஸ் அப்டேட்ஸ் வெளியாகவுள்ளதாம். இதுதவிர விஜய்யின் கேரக்டர் க்ளிம்ப்ஸ் வெளியாகுமா என்பதில் தான் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











