Leo Update: லியோ ஆடியோ லான்ச்... விஜய் எடுத்த அதிரடி முடிவு... ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ்!
சென்னை: வாரிசு திரைப்படம் வெளியானதுமே விஜய்யின் லியோ பட அப்டேட் டைட்டில் டீசர் வெளியானது.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து லியோ இரண்டாவதுகட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், லியோ படத்தின் இசை வெளியீடு குறித்து விஜய் அதிரடியாக முடிவெடுத்துள்ளாராம்.
லியோ ஆடியோ லான்ச்
விஜய்யின் லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இக்கூட்டணி இணைந்துள்ளது. விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கெளதம் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடிக்க அனிருத் இசையமைக்கிறார். ஆக்ஷன் ஜானரில் உருவாகும் இந்தப் படம் மிகப் பிரம்மாண்டமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
லியோ படத்தின் அப்டேட் வெளியான அதே வேகத்தில் காஷ்மீரில் படப்பிடிப்பு தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தற்போது சென்னையில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் ஆகியோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம். முக்கியமாக லியோ படத்தில் சஞ்சய் தத் தான் விஜய்யின் அப்பாவாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல், பல அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.
லியோ ஷூட்டிங் முடியும் முன்னரே விஜய்யின் தளபதி 68 அப்டேட்டும் வெளியானது. அதன்படி இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். லியோ ஷூட்டிங் முடிந்த பின்னர் தான் தளபதி 68 தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே லியோ ஆடியோ லான்ச் குறித்து விஜய் அதிரடி முடிவெடுத்துள்ளாராம். விஜய் நடிக்கும் படங்களின் இசை வெளியீட்டு விழா எப்போதும் சென்னையில் நடப்பது தான் வழக்கம்.
ஆனால், லியோ இசை வெளியீட்டு விழாவை சென்னை இல்லாமல் மதுரையில் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. தற்போது இதில் விஜய் மேலும் இரண்டு லொக்கேஷன்களை டிக் செய்துள்ளாராம். அதன்படி, திருச்சி, கோவை என இந்த இரண்டு நகரங்களில் எதாவது ஒன்றை தேர்வு செய்யலாம் எனக் கூறப்படுகிறது. இல்லையென்றால் ஏற்கனவே திட்டமிட்டபடி மதுரையில் நடக்கவே அதிக வாய்ப்புள்ளதாம்.
அரசியலில் களமிறங்கும் திட்டத்துடன் இருக்கும் விஜய், மாணவர்களை சந்திக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல், லியோ இசை வெளியீட்டு விழாவை சென்னை அல்லாது மற்ற நகரங்களில் எங்கேயாவது நடத்தினால், ரசிகர்களுக்கும் அது உற்சாகமாக இருக்கும் என விஜய் இந்த முடிவுக்கு வந்துள்ளாராம். இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











