Leo USA Box Office: அமெரிக்க பாக்ஸ் ஆபிஸிலும் சம்பவம் செய்த லியோ... வெறித்தனம் காட்டும் விஜய்!
சென்னை: விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் முதல் LCU படமாக வெளியாகியுள்ளது லியோ.
விஜய்யுடன் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிப்பில் மல்டி ஸ்டார்ஸ் படமாக லியோ உருவாகியுள்ளது.
இதனால், லியோவுக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டதோடு, முதல் நாளிலும் தரமான ஓபனிங் கிடைத்துள்ளது.
இந்நிலையில், லியோ திரைப்படம் முதல் நாள் அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்துள்ளதாக அபிஸியல் அப்டேட் வெளியாகியுள்ளது.

அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் லியோ சாதனை
விஜய் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லியோ திரைப்படம் நேற்று வெளியானது. லோகேஷ் இயக்கியுள்ள லியோ பான் இந்தியா படமாக வெளியாகியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் இந்தப் படத்துக்கு முதல் நாளில் தரமான ஓபனிங் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமே 35 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல் தென்னிந்திய மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானாவிலும் லியோ கலெக்ஷன் மாஸ் காட்டியுள்ளதாம். கேரளாவில் 11 கோடி, கர்நாடகாவில் 14 கோடி, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் 15 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. முக்கியமாக தென்னிந்திய மாநிலங்களில் முதல் நாளிலேயே 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்த படம் என்ற பெருமை லியோவுக்கு கிடைத்துள்ளது.
ஆகமொத்தம் உலகம் முழுவதும் லியோ படத்தின் முதல் நாள் வசூல் 140 கோடி ரூபாய் என சினிமா ட்ராக்கர்கள், விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இருப்பினும் அபிஸியல் அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் லியோ திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து அபிஸியலாக அப்டேட் வெளியாகியுள்ளது.

விஜய்யின் லியோ படத்தை பிரத்யங்கா சினிமாஸ் நிறுவனம் அமெரிக்காவில் வெளியிட்டுள்ளது. அந்நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் லியோ முதல் நாள் கலெக்ஷன் குறித்து அப்டேட் கொடுத்துள்ளது. அதன்படி முதல் நாளில் 2 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளதாம். இந்திய மதிப்பின் படி 16.6 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளது. இதுவரை அமெரிக்காவில் விஜய்யின் படங்கள் செய்த வசூலை விட, லியோ கலெக்ஷன் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











