Leo: லியோ ஆடியோ லான்ச் கேன்சல் சீப் பப்ளிசிட்டி.. விஜய்-லோகேஷ் மோதல் அபத்தமான காரணம்!!

சென்னை: விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ.

ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம், அடுத்த வாரம் 19ம் தேதி ரிலீஸாகிறது.

இதனிடையே லியோ ஆடியோ லான்ச் கேன்சல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதுகுறித்தும் விஜய் - லோகேஷ் இடையே மோதல் என வெளியான தகவல் பற்றியும் வலைப்பேச்சு அந்தணன் விளக்கம் கொடுத்துள்ளது வைரலாகி வருகிறது.

 Leo: ValaiPeachu Anthanan explains about Leo Audio launch cancellation

விஜய் - லோகேஷ் மோதல் அபத்தமான காரணம்
இந்தாண்டு கோலிவுட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் லியோ. இந்தப் படம் விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ளது தான் இதற்கான காரணமாகும். அதேபோல், விஜய்யுடன் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கெளதம் மேனன், ப்ரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், சாண்டி மாஸ்டர் என மிகப்பெரிய மல்டி ஸ்டார்ஸ் படமாகவும் லியோ உருவாகியுள்ளது.

இந்நிலையில், லியோ ஆடியோ லான்ச் கேன்சல் செய்யப்பட்ட விவகாரம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கடந்த மாதம் இறுதியில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் லியோ ஆடியோ லான்ச் நடைபெறும் என சொல்லப்பட்டது. ஆனால், அது கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்புத் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகள் மட்டுமே காரணம் எனவும், எந்தவிதமான அரசியல் அழுத்தங்களும் இல்லை என்றும் படக்குழு தெரிவித்திருந்தது.

இதனால் ரசிகர்கள் உட்பட பலரும், விஜய் அரசியலுக்கு வரவிருப்பதால், அவருக்கு மறைமுகமாக அழுத்தம் தரப்படுவதாகவே கூறி வந்தனர். ஆனால் அது உண்மையில்லை என்றும், இது விஜய்யின் பொலிட்டிக்கல் கேம் எனவும் வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார். அதாவது நேரு ஸ்டேடியம் அமைச்சர் உதயநிதியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. விஜய்க்கு அரசியல் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்றால், நேரு ஸ்டேடியத்தில் லியோ இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி கொடுக்காமல் இருந்திருக்கலாம் எனக் கூறியுள்ளார்.

 Leo: ValaiPeachu Anthanan explains about Leo Audio launch cancellation

மேலும், லியோ சிறப்புக் காட்சிகளுக்கும் தற்போது தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்திருக்காது. ஆனால், இதனை விஜய்யே திட்டமிட்டு செய்திருப்பதாக வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார். அதாவது 'அரசியல் அழுத்தம்' என்ற வார்த்தையால் அவர் தனது ரசிகர்களை திமுகவுக்கு எதிராக அணி திரட்டுவதை போல இருக்கிறது என்றுள்ளார். உண்மையில் லியோ இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்தது விஜய்யும் லலித் குமாரும் எடுத்த முடிவுதான் என விளக்கியுள்ளார்.

அதேபோல், விஜய் - லோகேஷ் கனகராஜ் இடையேயான மோதலும் தேவையில்லாத ஒன்றுதான். விஜய்யும் லோகேஷும் தொடர்ந்து சினிமாவில் பயணிக்கவிருப்பதால், அவர்களுக்குள் நல்ல புரிதல் உள்ளது. த்ரிஷாவுடன் டூயட் சாங் இல்லை என்றெல்லாம் விஜய் டென்ஷனாக வாய்ப்பில்லை. இது அபத்தமான காரணம் எனவும், விஜய்யும் லோகேஷும் இதற்காக எல்லாம் மோதியிருக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X