Leo: "விஜய்க்கு நரபலி சீன் புடிக்கல... லோகேஷின் மிதமிஞ்சிய நம்பிக்கைதான் காரணம்” பிரபலம் சொன்ன தகவல்

சென்னை: லியோ, விஜய் - லோகேஷ் காம்போவில் முதல் LCU படமாக உருவாகியுள்ளது.

அதுமட்டும் இல்லாமல் விஜய்யுடன் மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே லியோவில் நடித்திருந்தது.

 Leo: ValaiPechu Anthanan explained that Lokesh had cheated Vijays trust in Leo film

இத்தனை இருந்தும் லியோவுக்கு நெகட்டிவான விமர்சனங்கள் கிடைக்க லோகேஷின் மிதமிஞ்சிய நம்பிக்கை தான் காரணம் என வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார்.

முக்கியமாக விஜய்யின் நம்பிக்கையை லோகேஷ் கனகராஜ் ஏமாற்றிவிட்டதாகவும் அவர் கூறியது வைரலாகி வருகிறது.

விஜய்யை ஏமாற்றினாரா லோகேஷ் கனகராஜ்
மாநகரம், கைதி படங்கள் மூலம் மாஸ் காட்டிய லோகேஷுடன், மாஸ்டர் திரைப்படத்தில் முதன்முறையாக இணைந்தார் விஜய். அதன்பின்னர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கினார். மாஸ்டர், விக்ரம் படங்கள் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தன. இதனால், விஜய் - லோகேஷ் காம்போ மீண்டும் இணைந்தது.

கைதி, விக்ரம் படங்களில் இருந்து LCU கான்செப்ட்டை தொடங்கினார் லோகேஷ். இந்த யூனிவர்ஸில் லியோ திரைப்படம் மூலம் விஜய்யும் இணைந்துள்ளார். இந்தப் படம் பற்றிய அப்டேட் வெளியானது முதலே இது லோகேஷின் LCU சம்பவமாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அது லியோ வெளியானதுமே கன்ஃபார்ம் ஆனது. இருப்பினும் லியோவுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

முதல் நாளில் கிடைத்த தரமான ஓபனிங், தொடர் விடுமுறை, சோலோவாக வெளியானது மட்டுமே லியோவுக்கு பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் கிடைக்க காரணமாகியுள்ளது. இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் லியோ படம் குறித்த நெகட்டிவான விமர்சனங்கள் வைரலாகி வருகின்றன. அதிகமான வன்முறை காட்சிகள், சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை என லியோவை பங்கம் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

 Leo: ValaiPechu Anthanan explained that Lokesh had cheated Vijays trust in Leo film

இந்நிலையில், லியோவின் தோல்விக்கு லோகேஷ் கனகராஜ்ஜின் மிதமிஞ்சிய நம்பிக்கை தான் காரணம் என வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார். லோகேஷ் மீது அதிகமான நம்பிக்கை வைத்தே விஜய் இந்தப் படத்தில் கமிட்டானார். ஆனால், இந்தப் படத்தில் வரும் நரபலி சீனில் விஜய்க்கு உடன்பாடு இல்லையென்றும், லோகேஷ் தன்னால் முடியும் என்ற மிதமிஞ்சிய நம்பிக்கையில் அதனை வைத்ததாகவும் கூறியுள்ளார்.

நான் நினைத்தால் எந்தக் காட்சியையும் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் கொடுத்துவிட முடியும் என லோகேஷ் நினைத்தது தான் இதற்கெல்லாம் காரணம். மாஸ் ஹீரோவான விஜய், முழுக்க முழுக்க லோகேஷை மட்டுமே நம்பினார். ஆனால், அதனை லோகேஷ் சரியாக செய்யவில்லை எனவும் வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார். மேலும், லியோவில் சில காட்சிகளை விஜய் மாற்ற சொன்னதாக தயாரிப்பாளர் லலித் குமார் பேசியிருந்ததையும் சுட்டிக் காட்டியிருந்தார்.

இருதினங்களுக்கு முன்னர் லியோவில் சில இடங்களை விஜய் மாற்ற சொன்னது உண்மை தான் என, தயாரிப்பாளர் லலித் குமார் பேட்டிக் கொடுத்திருந்தார். அவரது பேட்டி வைரலான பின்னரே விஜய்க்கும் லோகேஷுக்கும் லியோ ஸ்பாட்டில் மோதல் ஏற்பட்டது உண்மையாக இருக்குமோ என ரசிகர்களும் விவாதம் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X